“பாஸ்பால்னா என்னன்னு எனக்கு மட்டும் புரிஞ்சிருச்சு.. அதுக்கு மேலதான் நம்பிக்கையே வந்துச்சு” – அஸ்வின் பேட்டி

0
190
Ashwin

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஆரம்பம் இந்திய நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நல்லபடியாக ஆரம்பிக்கவில்லை.

சர்வதேச 500 டெஸ்ட் விக்கெட்டுகள் மற்றும் சர்வதேச நூறாவது டெஸ்ட் போட்டி என இரண்டு பெரிய இலக்குகளோடு இந்த தொடருக்குள் வந்த அவருக்கு ஆரம்பத்தில் வைக்கட்டுகள் கிடைப்பதில் பெரிய தடை உண்டானது.

- Advertisement -

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவரது வழக்கமான பந்து வீச்சு திரும்ப வந்தது. தொடரை முடிக்கும் பொழுது 26 விக்கெட்டுகள் எடுத்து, தொடரில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளராக தொடரை முடித்தார்.

மேலும் தனது நூறாவது டெஸ்டில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்து இருந்தால். மொத்தம் 128 ரன்கள் தந்து ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். நூறாவது டெஸ்ட் விளையாடும் ஒரு பந்துவீச்சாளரின் மிகச் சிறந்த பந்துவீச்சாக இது பதிவானது.

இந்த நிலையில் நடந்து முடிந்த தொடர் குறித்து பேசி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து இலக்கை துரத்த இருந்த பொழுது, ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 ரன்கள் ஆக இருந்தாலும் 60 ஓவர்களில் அடிப்போம் என்பது போல பேசி இருந்தார். அவர் பேசியிருந்தது தன்னம்பிக்கை பேச்சு என்றாலும் கூட, நாங்கள் நீண்ட தூரம் சென்று விட்டோம் இனி திரும்ப வர முடியாது என்பது போல இருந்தது.

- Advertisement -

ஆனால் இவர்கள் பாஸ்பால் முறையில் விளையாடுகிறார்கள் என்றால், தற்போது கிரிக்கெட் உலகில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக மிகச்சிறந்த டிபென்ஸ் வைத்திருக்கக் கூடிய ஜோ ரூட் எப்படி பாஸ்பால் முறையில் விளையாட ஒத்துக் கொண்டார் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இதையும் படிங்க : WPL 2024.. ஆர்சிபி-க்கு அடிக்கும் லக்.. குஜராத் உபி மேட்சில் நடந்த செம டிவிஸ்ட்.. பிளே-ஆப் வாய்ப்பு எப்படி

மேலும் அவர்களுடைய பாஸ்பால் முறையில் எப்படி விளையாடுகிறார்கள் என்று நான் புரிந்து கொண்டேன். அதாவது அவர்கள் ரன் அடிப்பதை மட்டும் நோக்கமாக வைத்திருக்கவில்லை. பந்தை தடுத்து விளையாட கூடாது என்றும் நினைத்தார்கள். எல்லாப் பந்தையும் அடிக்கவே போனார்கள். தடுத்து விளையாடினால் ஆட்டம் இழந்து விடுவோம் என்பதாக அவர்கள் நினைத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்