தோனிக்கு 19வது ஓவருக்கு முன்ன சாம்கரன் என்கிட்ட இதை சொன்னார்.. ரொம்ப தைரியமான பையன் – ரூசோவ் பேட்டி

0
184
Curran

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர்களின் சொந்த மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் எடுத்த சில முடிவுகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரைலி ரூசோவ் பாராட்டி பேசி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் டாஸ் வென்றது அவர்களது வெற்றியில் ஒரு முக்கிய பங்கை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பந்து வீசுவதற்கு மிகவும் மோசமான சூழ்நிலை காணப்பட்டது. பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது பந்துவீச்சாளர்களை பாதித்தது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக சேப்பாக்கம் ஆடுகளம் இருந்த காரணத்தினால், பவர் பிளே முடிந்து தொடர்ந்து ஏழு ஓவர்களை ஸ்பின்னர்களை பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் வீச வைத்தார். அதே ஸ்பின்னர்களில் ராகுல் சாஹருக்கு ஒரு ஓவர் மீதம் இருந்தது. அந்த ஒரு ஓவரை தொடர்ச்சியாக கொடுத்து முடிக்காதது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்களும் விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில்தான் மகேந்திர சிங் தோனி களம் இறங்கியதும் 19ஆவது ஓவரில் ராகுல் சாஹருக்கு மீதம் இருந்த ஒரு ஓவரை கொடுத்தார். அந்த ஓவரில் நான்கு பந்துகளை சந்தித்த தோனி இரண்டு ரன் மட்டுமே எடுத்தார். மொத்தமாகவே அந்த ஓவரில்மூன்று ரன்கள் மட்டுமே வந்தது. தோனி குறிப்பாக லெக் ஸ்பின்னர்களுக்கு தடுமாறுவார் என்பதை உணர்ந்து, தற்போது அவர் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறார் என்பதையும் உணர்ந்து, சாம் கரன் எடுத்த இந்த முடிவை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

இதுகுறித்து பஞ்சாப் அணியின் ரைலி ரூசோவ் கூறும்பொழுது “நாங்கள் இது குறித்து வெளியே பேசினோம். இதற்கு நீங்கள் நிச்சயமாக சாம் கரனுக்குதான் கிரெடிட் தர வேண்டும். அவர் போட்டியில் என்னிடம் வந்து ‘ 19ஆவது ஓவரை ஸ்பின்னருக்கு தரப் போகிறேன் அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அந்த நேரத்தில் அவர் ஒரு சூதாட்டத்தை விளையாடினார். எனவே அப்படி ஒரு தைரியமான முடிவு எடுத்ததற்கான பெருமையை அவருக்கே கொடுக்க வேண்டும். கொஞ்சம் பந்து திரும்பும் மெதுவாக இருக்கும் ஆடுகளத்தில் அவர் சிறப்பான ஒரு முடிவை எடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : தீபக் சாஹர் மட்டுமில்ல.. இத்தனை பிளேயர்ஸ் கிட்ட டீம்ல பிரச்சனை இருக்கு – பிளமிங் கவலை

எங்களுடைய ஸ்பின்னர்கள் ஹர்பரித் மற்றும் ராகுல் இருவரும் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்கள் விக்கெட் டு விக்கெட் பந்து வீசுவதை நோக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆடுகளம் விக்கெட் எடுப்பதற்கு சாதகமாக இல்லை என்றால் கூட விக்கெட்டை எடுப்பதற்கான திறமையுடன் இருக்கிறார்கள். மேலும் அவர்கள் விக்கெட் எடுப்பதோடு மட்டுமல்லாமல், சிக்கனமாகவும் பந்து வீசுவது எங்களுக்கு பெரிய பயன் கொடுக்கிறது” என்று கூறியிருக்கிறார்.