நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி பஞ்சாப் அணிக்கு எதிராக மோசமாக விளையாடியது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த அணியில் வீரர்களின் காயம் பெரிய கவலை அடைய வைப்பதாக இருக்கிறது. இது குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் டாஸ் தொற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதே சமயத்தில் பந்து வீச வந்த பொழுது 17.5 ஓவர்களில் ரன்களை திருப்பிக் கொடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
குறிப்பிட்ட இந்த போட்டியில் நேற்று துஷார் தேஷ்பாண்டே, மதிஷா பதிரனா என இரண்டு முக்கிய பந்துவீச்சாளர்கள் விளையாடவில்லை. அதே சமயத்தில் நேற்று சிஎஸ்கே அணியின் பந்துவீச்சின் போது தீபக் சாஹர் இரண்டு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயமடைந்து களத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
இப்படி மிக முக்கியமான வீரர்கள் எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை சிஎஸ்கே அணியில் இருந்து வருகிறது. இது அந்த அணியின் செயல் திறனை தற்பொழுது கடுமையாக பாதித்திருக்கிறது. அந்த அணிக்கு மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஸ்டீபன் பிளமிங் “தீபக் சாஹர் நன்றாக இல்லை. மேற்கொண்டு மருத்துவர்கள் மற்றும் பிசியோக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்காக காத்திருக்கிறோம். தீக்சனா பதிரனா இருவரும் டி20 உலகக் கோப்பைக்கு விசா பெறுவதற்காக இலங்கை சென்று இருக்கிறார்கள். அவர்களை அடுத்த ஆட்டத்தில் மீண்டும் எப்படியும் பெற்று விடுவோம்.
இதையும் படிங்க : தோனி டேரில் மிட்சலுக்கு செஞ்சது தவறு.. அவர் என்ன கடைசி பேட்ஸ்மேனா? – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
அதே சமயத்தில் துஷார் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். எனவே நாங்கள் அணியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியதாக இருந்தது. இது கிரிக்கெட்டின் ஒரு பகுதிதான். ஆனால் புதிய வீரர்கள் உள்ளே வரும் பொழுது, அவர்கள் தங்கள் ரோலை புரிந்து கொள்வதற்கான நேரம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக அவர்களால் கேம் ப்ளான் உடன் சரியாக ஒட்டிக் கொள்ள முடிவதில்லை. இந்த இடத்தில் தான் எங்களுக்கு பெரிய பிரச்சினையாக அமைந்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.