விற்கப்படாத பிரித்வி ஷா.. என்னால இவ்வளவு தான் சொல்ல முடியும் – ரிக்கி பாண்டிங் வருத்தம்

0
390
Ponting

2024 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல் அணியில் கழட்டிவிடப்பட்டு விற்கப்படாமல் போன பிரித்வி ஷா குறித்து அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும் தற்போதைய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.

இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரித்வி ஷா இரண்டு முறை வந்த பொழுதும் அவரை 10 அணிகளில் ஒரு அணி கூட வாங்குவதற்கு முயற்சி செய்யவில்லை. அதிரடியாக விளையாடக்கூடிய அவரை பேக்கப் ஓபனராக கூட எந்த அணியும் வாங்க விரும்பாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

அடுத்த சச்சின் சேவாக் கலவை

இந்திய கிரிக்கெட்டில் பிரித்வி ஷா ரஞ்சி டிராபி, துலிப் டிராபி மற்றும் சர்வதேச டெஸ்ட் என தனது மூன்று அறிமுக போட்டிகளிலும் சதம் அடித்த ஒரே இந்திய வீரராக சாதனை படைத்தார். சச்சின் டெண்டுல்கர் கூட இதை செய்தது கிடையாது. எனவே இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் எதிர்காலமாக பார்க்கப்பட்டார்.

மேலும் இவர் விளையாடக்கூடிய விதம் சச்சின் மற்றும் சேவாக்கின் கலவை போல் தெரியும். ஒரே நேரத்தில் அற்புதமான டைமிங் மற்றும் அதிரடி என ஆரம்ப காலத்தில் தனக்கு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்தார். இப்படிப்பட்ட ஒருவர் தற்பொழுது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் உடல் தகுதி பயிற்சி ஆகியவற்றில் இல்லாததாலும் ஐபிஎல் தொடரில் தன் இடத்தை இழந்திருக்கிறார்.

- Advertisement -

இவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்

இது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நான் அவருடன் இணைந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பணியாற்றி இருக்கிறேன். அப்போது அவர் எவ்வளவு சிறந்த வீரராக இருப்பாரோ இப்பொழுதும் அவர் அவ்வளவு சிறந்த வீரர்தான். அவர் இந்த எல்லா காலகட்டத்திலும் சிறந்த பேட்ஸ்மேனாகவே இருந்திருக்கிறார்”

இதையும் படிங்க : பஞ்சாப் விட ஆர்சிபி எனக்கு இதுல பெஸ்ட்.. வேற மாதிரி அடிரடிய பாக்க போறீங்க – இங்கி லிவிங்ஸ்டன் பேட்டி

“அவர் ஐபிஎல் ஏலத்தில் வந்த பொழுது முதலில் வாங்காதது மட்டும் இல்லாமல் ஆக்சிலேட்டர் ரவுண்டில் கூட பத்து அணிகள் இருந்தும் யாரும் வாங்காதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. விளையாட்டு ஒரு வீரரை பிடித்துக் கொள்ளும். என்னால் இந்த விஷயத்தில் இவ்வளவுதான் சொல்ல முடியும். அவருக்கான நேரம் வரும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -