18வது சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற முடிந்த நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து அணியை வலுவாக கட்டமைத்தது. இந்த சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை போட்டி போட்டு தங்கள் அணிக்கு இழுத்தது.
இந்த சூழ்நிலையில் லிவிங்ஸ்டன் பெங்களூர் அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
18வது ஐபிஎல் மெகா ஏலம்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் துபாயில் உள்ள ஜெட்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 8.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர் பஞ்சாப் அணிக்காக விளையாடிய நிலையில் பஞ்சாப் அணி அவரை திரும்பவும் எடுக்க போட்டி போட்டது.
ஆனால் பெங்களூர் அணி அவரை விடாப்பிடியாக தங்கள் அணிக்கு எடுத்தது. பெங்களூர் அணி வாங்கப்பட்ட பிறகு சமூக வலைதளத்தில் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த லிவிங்ஸ்டன் பெங்களூர் அணியோடு விளையாடுவதற்கு உற்சாகமாக இருப்பதாகவும், விராட் கோலி போன்ற வீரர்களோடு விளையாடுவது அருமையான நிகழ்வு என்று சில முக்கிய கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார்.
எனது ஆட்டத்திற்கு நிச்சயம் பொருத்தமாக இருக்கும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பெங்களூர் அணியில் இருக்கும் வீரர்களோடு எனக்கு நல்ல தொடர்பு உண்டு. எனவே பெங்களூர் அணியில் ஒரு குழுவாக விளையாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். விராட் கோலி போன்ற ஒருவரோடு விளையாடுவது மிகவும் அருமையான நிகழ்வு. பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இது வலுவான ஐபிஎல் அணிகளில் ஒன்றாகும். இது எனக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கப் போகிறது.
இதையும் படிங்க:முதல் இன்னிங்ஸ் 5.. இரண்டாவது இன்னிங்ஸ் 100.. கோலி இப்படி ஆட அதுவே காரணம் – கவாஸ்கர் பேட்டி
பெங்களூர் மைதானம் எனது ஆட்டத்திற்கு நிச்சயமாக பொருந்தி போகும். இந்தியாவில் இருக்கும் மைதானங்களை விட பெங்களூர் மைதானம் சிறியதாக இருக்கும். நான் பஞ்சாப் மைதானத்தில் விளையாடியதை விடவும் பெங்களூர் மைதானம் சிறியது. எனவே எனது ஆட்டம் பெங்களூர் மைதானத்திற்கு நன்றாக பொருந்த வேண்டும் என்று நம்புகிறேன்” என லிவிங்ஸ்டன் கூறி இருக்கிறார். ஏற்கனவே தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட், விராட் கோலி, பட்டிதார் ஆகிய அதிரடி பட்டாளம் இருக்கும் நிலையில் லிவிங்ஸ்டனும் தற்போது பெங்களூர் அணியில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.