ஐபிஎல்-லை விட்டு.. இங்கிலாந்து வீரர்கள் வெளியே போனத.. நான் பாராட்டறேன் – பாக் சக்லைன் முஸ்டாக் பேச்சு

0
116
Saqlain

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவடைந்து நேற்று முதல் பிளே ஆப் சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிளே ஆப் சுற்றில் இருந்து முழுவதுமாக இங்கிலாந்து வீரர்கள் வெளியேறி இருக்கிறார்கள். அதாவது டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் இடம் பெற்ற வீரர்கள் வெளியேறி இருக்கிறார்கள். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் சக்லைன் முஸ்டாக் இங்கிலாந்து வீரர்களை பாராட்டி இருக்கிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக தங்களது அணி வீரர்கள் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும் என விரும்புகிறது. மேலும் டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சி பெறும் விதமாக உள்நாட்டில் பாகிஸ்தான் அணிக்கு டி20 தொடரில் விளையாடவும் இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஹைதராபாத் அணி தவிர ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற மற்ற மூன்று அணிகளும், தங்களது முக்கிய வீரர்களை இழந்திருக்கின்றன.

அதே சமயத்தில் இது கிரிக்கெட் காலண்டரில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தொடராக இருப்பதால்தான் நடத்தப்படுகிறது என்று இங்கிலாந்து தரப்பில் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து வீரர்கள் சரியாக தயாராகாததே தோல்விக்கு காரணம் எனவும், இப்பொழுது அப்படி நடக்க கூடாது எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்புவது தெரிகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னால் வீரர் சக்லைன் முஸ்டாக் கூறும்பொழுது ” இங்கிலாந்து அணிக்காக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறிய இங்கிலாந்து வீரர்களின் கருத்துக்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது, தங்கள் நாட்டுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். நான் இதை பாராட்டுகிறேன். ஒரு வீரராக பயிற்சியாளராக என்னுடைய தத்துவம் மற்றும் மதிப்புகள் ஆகியவை நாட்டிற்காக விளையாடுவதற்குதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி சாம்சன் சரிவராது.. ஐபிஎல்ல பார்த்தா இவங்க இந்திய டீம்லயே இருக்க மாட்டாங்க – யுவராஜ் சிங் பேட்டி

அதே சமயத்தில் ஜோஸ் பட்லர் நாட்டிற்காக விளையாடுவது மிகவும் முக்கியமாக இருந்தாலும் கூட, சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஐபிஎல் தொடருடன் போட்டியிடுவதாக வரக்கூடாது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் பங்கேற்போம் வீரர்கள், இறுதிக்கட்டத்தில் தங்கள் அணியின் வெற்றிக்கு உதவி செய்யாமல் வெளியேறுவது அவர்களுக்கு வருத்தத்தை கொடுப்பது ஜோஸ் பட்லர் பேச்சில் தெரிகிறது.