கண்ணீரோடு ஓய்வு.. அடுத்த நாள் ஆஸிக்கு எதிராக ஃபீல்டிங்.. நீல் வாக்னர் என்ன நடக்கிறது

0
571
Wagner

நேற்று முன்தினம் நியூசிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்று இருந்த நீல் வாக்னர் திடீரென நேற்று முன்தினம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

ஓய்வு முடிவை அறிவித்த பொழுது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுது தன்னுடைய ஓய்வு குறித்தான அறிவிப்பை வெளியிட்டார். மிகவும் அது உணர்ச்சிபூர்வமான நிகழ்வாக நியூசிலாந்து கிரிக்கெட்டில் அமைந்திருந்தது.

- Advertisement -

மேலும் ஓய்வு அறிவித்த அவர் தொடர்ந்து உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் தான் விளையாட இருப்பதாக கூறியிருந்தார். சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணி புதிய வீரர்களோடு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும் அவர் பேசியிருந்தார்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி நேற்று முன்தினம் ஓய்வையும் அறிவித்துவிட்ட அவர், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மாற்று வீரராக ஃபீல்டிங் செய்ய களத்திற்கு வந்து ஆச்சரியப்படுத்தினார். களத்திற்கு அவர் வந்த பொழுது போட்டியை பார்க்க வந்திருந்த இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் பெரிய வரவேற்பை அவருக்கு கொடுத்தார்கள்.

அவர் எப்படி மாற்று வீரராக ஃபீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார் என்றால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியிலும் இருக்கிறார். ஆனால் விளையாட மாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க : AUSvsNZ.. கேமரூன் கிரீன் தனியாளாக போராட்டம்.. நியூசிலாந்து பவுலிங்கில் பட்டாசு.. ஆஸி தடுமாற்றம்

நியூசிலாந்து கிரிக்கெட்டில் வீரர்கள் மிகவும் குறைவு. எனவே ஏதாவது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தலையில் காயம் ஏதாவது ஏற்பட்டால், மாற்று வீரராக வந்து விளையாடுவதற்கு தகுதியான வீரர் தேவை என்பதால், அவர் அணியில் தொடர்கிறார். இப்படி அணியில் தொடர்கின்ற காரணத்தினால் தான் அவரால் ஒரு வீரருக்கு பதிலாக உள்ளே வந்து பீல்டிங் செய்ய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -