இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடும் சிஎஸ்கே அணி, 14 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று, 14 புள்ளிகள் பெற்று துரதிஷ்டவசமாக ரன் ரேட் நல்ல விதத்தில் இல்லாத காரணத்தினால் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் ராபின் உத்தப்பா கம்பீரை உதாரணம் வைத்து பேசி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மென்டராக கம்பீர் இந்த முறை பொறுப்பேற்றுள்ள கொல்கத்தா அணி, லீக் சுற்றில் 20 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் வாய்ப்பை பெற்றது.
மேலும் சுனில் நரைனை துவக்க வீரராக கொண்டு வந்து, அவர் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து கொல்கத்தா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். மேலும் இந்த முறை ரசல் நீண்ட காலம் கழித்து ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வருகிறார். இந்த மாற்றங்கள் கம்பீரின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கிறது.
தற்பொழுது இதன் காரணமாக கம்பீர் அணுகுமுறை குறித்து சமூக வலைதளங்களில் நல்ல முறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கிறது. மேலும் அவர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூ டியூப் சேனலில் பேசி இருக்கிறார். இதுவெல்லாம் சேர்ந்து அவர் மேல் இருக்கும் பார்வை மாறி இருக்கிறது.
இந்த நிலையில் ராபின் உத்தப்பா கூறும் பொழுது “கேப்டனாக தோனியும் கம்பீரம் ஒரே மாதிரியானவர்கள் என்று நான் எப்பொழுதும் நினைத்து வருகிறேன். அவர்கள் குணாதிசயத்தில் எதிரெதிராக இருப்பது போல நமக்கு தோன்றும். ஆனால் அவர்கள் கேப்டனாக வீரர்களை ஆதரிப்பதில் புரிந்து கொள்வதில் ஒரே மாதிரியானவர்கள்.
சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசல் இருவரும் சிறப்பாக விளையாடுவதற்கு என்ன தேவை என கம்பீர் தெளிவாகத் புரிந்திருக்கிறார். அவர்களுக்கு நல்ல சுதந்திரம் தேவை, அவர்கள் ரோல் என்னவென்று தெளிவாகத் தெரிய வேண்டும், மேலும் அவர்களுக்கு பின்னால் நின்று நல்ல நம்பிக்கையையும் ஆதரவையும் கொடுக்க வேண்டும். இதை அப்படியே கம்பீர் செய்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் அவர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.