முதல் தகுதிச் சுற்றில்.. முதல் முறையாக ஹைதராபாத்துக்கு நடந்த சோகம்.. வொர்க் ஆகாத பிளான்

0
413
SRH

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவடைந்து, இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த முறையும் அந்த அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்தார். மற்றுமொரு அதிரடி துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி 10 பந்தில் 9 ரன்கள், ஷாபாஷ் அகமது கோல்டன் டக் என அடுத்தடுத்து வெளியேற, ஹைதராபாத் அணி 39 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் ஜோடி 37 பந்தில் 62 ரன்கள் எடுத்து அணியை மீட்டது.

ஆனால் கிளாசன் 21 பந்தில் 32 ரன்கள் எடுத்து வெளியேற அங்கிருந்து சரிவு ஆரம்பித்தது. இதற்கு அடுத்து துரதிஷ்டவசமாக ராகுல் திரிபாதி 35 பந்தில் 55 ரன்கள், அப்துல் சமாத் 12 பந்தில் 16 ரன்கள் என வெளியேற்றினார்கள். ஹைதராபாத் அணி 126 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

இதற்கு அடுத்து ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் வழக்கம்போல் அணியை மீட்கும் வேலையில் ஈடுபட்டார். கடைசிக் கட்டத்தில் பொறுப்பாக விளையாடிய அவர் 24 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். முடிவில் ஹைதராபாத் அணியும் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் ஸ்டார்க் 3, வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலிய நாளைக்கு ஸ்லெட்ஜிங் பண்ணுவேன்.. அது கொஞ்சம் நல்லா இருக்கும் – நன்ட்ரே பர்கர் பேட்டி

இந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் ஹைதராபாத் அணிக்கு முதலில் பேட்டிங் செய்வது எப்பொழுதும் வெற்றிகரமாக இருந்து வந்திருக்கிறது. எனவே அவர்கள் டாஸ் வென்று நேராக பேட்டிங் தேர்வு செய்தார்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த முறை அவர்களுக்கு முதலில் பேட்டிங் செய்வது பலனளிக்கவில்லை. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து ஆல் அவுட் ஆகி இருக்கும் சோகம் நடந்திருக்கிறது.