ஆஸ்திரேலிய அணி தற்பொழுது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் முதலில் நடைபெற்ற மூன்று
போட்டிகள் கொண்ட டி20 தொடரை மிட்சல் மார்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி முழுவதுமாக கைப்பற்றி நியூசிலாந்துக்கு சொந்த மண்ணில் அதிர்ச்சி தந்தது.
இதற்கு அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று வெலிங்டன் மைதானத்தில் தொடங்கிநடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டேவிட் வார்னர் ஓய்வு பெற்று விட்டதால் துவக்க ஆட்டக்காரராக வந்த ஸ்மித் 31, உஸ்மான் கவஜா 33, லபுசேன்1, டிராவிஸ் ஹெட் 1, மிட்சல் மார்ஸ் 40, அலெக்ஸ் கேரி 10, மிட்சல் ஸ்டார்க் 9, பாட் கம்மின்ஸ் 16, நாதன் லயன் 5 ரன்கள் எடுத்து வரிசையாக வெளியேறினார்கள்.
ஸ்மித் துவக்க ஆட்டக்காரராக மேல் வரிசைக்கு சென்று விட்டதால், மிக முக்கியமான நான்காவது இடத்தில் கேமரூன் கிரீன் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து களம் இறக்கப்பட்டு வருகிறார்.
இன்று நியூசிலாந்துக்கு எதிராகவும் நான்காவது வீரராக வந்த அவர் ஒரு முனையில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்து கொண்டிருந்த பொழுதும், மிகவும் நேர்த்தியான முறையில் விளையாடி சதம் அடித்து அசத்தினார். 156 பந்துகள் சந்தித்த அவர் 16 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்.
இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்திருக்கிறது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. ரஜத் பட்டிதார் இடத்தில்.. 7 இன்னிங்ஸில் 4 சதம் அடித்த வீரருக்கு வாய்ப்பு என தகவல்
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கின்றன. இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனவே இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் பொழுது, ஏதாவது ஒரு அணி இரண்டு போட்டிகளையும் தோற்கும் என்றால் அது இந்திய அணிக்கு நல்லதாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.