3 மடங்கு சம்பளம்.. ஐபிஎல் தொடருக்கு இணையாக உள்நாட்டு மற்றும் இந்திய வீரர்களுக்கு உயர்வு.. புதிய தகவல்கள்

0
216
BCCI

இந்திய கிரிக்கெட் வாரியம் சில அதிரடியான முடிவுகளை உடனுக்குடன் எடுத்து ஆச்சரியப்படுத்தி கொண்டு வருகிறது. ஐபிஎல் தொடர் மூலம் பெரிய வருமானம் கிடைத்தாலும், மற்ற உள்நாட்டு கிரிக்கெட் வடிவங்களில் வீரர்கள் விளையாடாமல், இந்திய கிரிக்கெட் ஆரோகியமாக இருக்காது என்று பிசிசிஐ உணர்ந்து இருக்கிறது.

இதன் காரணமாக ஐபிஎல் தொடருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கும் கொடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக அறிவுறுத்தி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த அறிவுறுத்தலை பின்பற்றாத வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும், அதேபோல் சம்பள ஒப்பந்தத்தில் தொடர மாட்டார்கள் என்பதாகவும் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

இதற்கு ஏற்றபடியே நேற்று அறிவிக்கப்பட்ட சம்பள பட்டியலில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இந்திய கிரிக்கெட் அணிகளும் இடம்பெறாமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் கழட்டி விடப்பட்டு இருக்கிறார்கள்.

தற்பொழுது ஐபிஎல் தொடரில் கிடைக்கும் சம்பளம், உள்நாட்டு மற்றும் இந்திய அணிக்கு விளையாடும் பொழுதும் கிடைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சம்பளம் பற்றிய பரிந்துரைகள் சென்று இருக்கின்றன. இதன் காரணமாகவே சம்பளப் பட்டியலில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்று இன்னும் குறிப்பிடப்படாமல் இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து வெளியான செய்திகள் கூறப்பட்டிருப்பதாவது “சம்பளம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வந்திருக்கும் பரிந்துரைகள் உள்நாட்டு மற்றும் இந்திய அணிக்கு விளையாடும் வீரர்களுக்கு மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்பதாக இருக்கிறது.

ஒரு உள்நாட்டு வீரர் முழு ரஞ்சித் தொடரையும் விளையாடினால் அவருக்கு 75 லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டுமென கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு உள்நாட்டு வீரருக்கு ஐபிஎல் தொடரில் அடிப்படை விலையாக 20 லட்சம் கொடுக்கப்படுகிறது, அதைவிட அதிகமாக ரஞ்சித் தொடர் விளையாடி முடித்தால் கொடுக்கப்பட வேண்டும். மேலும் இந்திய அணிக்காக ஒரு வருடத்தின் டெஸ்ட் சீசன் முழுவதும் விளையாடினால், ஐபிஎல் தொடரில் மார்க்யூ பிளேயருக்கு வழங்கப்படும் 15 கோடியை கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: “நான் இந்த இந்திய பவுலரை பார்த்துதான் அதை கற்றுக் கொண்டேன்” – ஜேம்ஸ் ஆண்டர்சன் பேச்சு

இந்த மூன்று மடங்கு சம்பள உயர்வை முழுதாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளாமலும் போகலாம். ஆனால் இந்த வருடத்தின் மத்தியில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களை அழைத்துப் பேச இருக்கிறது. இதனால்தான் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள சம்பளப் பட்டியலில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் ஒவ்வொரு போட்டிக்கும் தனிப்பட்ட கட்டணத்தை உயர்த்துவதா? இல்லை ஒரு வீரருக்கு என்று தனி சம்பளத்தை நிர்ணயிப்பதா? என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் கட்டாயம் முடிவு செய்யும்” என்று கூறப்பட்டு இருக்கிறது.