பும்ரா பவுலிங் வீடியோவ தினமும் பார்த்தேன்.. ரொம்ப பதட்டமா இருந்தது.. ஆனால்.. – ஜாக் பிரேசர் மெக்கர்க் பேட்டி

0
918
Fraser

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் இரண்டு போட்டிகளில், மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய முதல் போட்டியில், ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியில் டெல்லி மணி 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது. ஆட்டநாயகன் விருது பெற்ற ஜாக் பிரேசர் மெக்கர்க் வெற்றி குறித்து பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற மும்பை டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. டெல்லி அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியாக 15 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு எதிராக 15 பந்துகளில் அரை சதம் அடித்திருக்கிறார். இன்று அடித்த அரைசதம் மூன்றாவது அறை சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது தொடர்ந்து விளையாடிய அவர் மொத்தம் 27 பந்துகளை மட்டுமே சந்தித்து 11 பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் அனாயசமாக 84 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். டெல்லி அணி 20 ஓவர்களில் 257 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து விளையாடிய மும்பை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. முடிவில் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஐந்தாவது வெற்றி பெற்றதோடு, புள்ளி பட்டியலிலும் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது..

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஜாக் பிரேசர் மெக்கர்க் பேசும் பொழுது “பும்ராவை சந்திப்பது பதட்டமாக இருந்தது.அவர் பந்து வீசும் வீடியோக்களை நான் தினமும் பார்த்தேன். ஆனால் விளையாட்டு என்று வரும் பொழுது எல்லாமே வெளியில் சென்று விடுகிறது. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக உங்களை பரிசோதிப்பது சிறந்த விஷயம்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா செய்த தவறு.. மும்பை தோல்வி.. சிஎஸ்கேவை கீழே இறக்கி டெல்லி புள்ளி பட்டியலில் முன்னேற்றம்

இது அலையில் பயணம் போல ஏற்றத்தாழ்வு இருக்கும். இந்த இன்னிங்ஸ் எனக்கும் என்னுடைய அணிக்கும் நல்ல நம்பிக்கையை கொடுக்கும். வெளியில் இருக்கும் பொழுது ஐபிஎல் குறித்து தெரியாது. உண்மையில் ஐபிஎல் உலகின் உயர்மட்ட டி20 லீக் ஆகும். ஒரு ஓவரின் கடைசி பந்தாக இருந்தாலும் அல்லது பேட்டில் சரியாக படாவிட்டால்தான் நான் சிங்கிள் ரன்கள் எடுப்பேன்” என்று கூறியிருக்கிறார்.