“நான் இந்த இந்திய பவுலரை பார்த்துதான் அதை கற்றுக் கொண்டேன்” – ஜேம்ஸ் ஆண்டர்சன் பேச்சு

0
145
Zaheer

இன்றைய கிரிக்கெட் உலகில் மிகவும் அதிசயத்தக்க அபூர்வ வீரராக இங்கிலாந்தின் 42 வயதான வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பார்க்கப்படுகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த வயதில் அதுவும் வேகப்பந்துவீச்சாளராக இருப்பது என்பது நம்ப முடியாத ஒன்று. மிகப்பெரிய அளவில் உழைப்பு தேவைப்படும் வேகப்பந்து வீச்சில் முன்னணி பந்துவீச்சாளராக 42 வயதில் இருப்பது யாராலும் முடியாது என்று சொல்லலாம்.

- Advertisement -

ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் சீரான வேகத்தில் சீரான முறையில் இன்னும் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டு வருகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களை இப்பொழுதும் அவரால் அற்புதமான முறையில் வீழ்த்த முடியும்.

மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஸ்விங் வேகப்பந்து வீச்சு கலையின் அரசன் என்று அழைக்கப்படுகிறார். வழக்கமான இரண்டு ஸ்விங் தவிர்த்து, ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் வாபுல் சீம் ஆகிய பந்துவீச்சு கலைகளில் கைதேர்ந்த வித்தைக்காரர்.

இந்த நிலையில் தான் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சை இந்தியாவின் முன்னாள் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் இடம் இருந்து கற்றுக் கொண்டதாக வெளிப்படையாக கூறி இருக்கிறார். மேலும் தற்பொழுது இந்த கலையில் பும்ரா உலகின் தலைசிறந்தவராக இருந்து வருகிறார் என்றும் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “என்னை பொருத்தவரை நான் ஜாகிர் கான் இடம் இருந்துதான் அதிகம் கற்றுக் கொள்ள முயற்சி செய்திருக்கிறேன். அவர் பந்தை எப்படி ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார்? அவர் ஓடிவரும் பொழுது பந்தை எப்படி கையால் மறைத்துக் கொண்டு வருகிறார்? என்பதையெல்லாம் அவருக்கு எதிராக விளையாடியதின் மூலமாக நான் கற்றுக் கொள்ள முயற்சி செய்தேன்.

பும்ரா மிகவும் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரிடமிருந்து நீங்கள் மிகவும் சிறப்பானதைதான் எதிர்பார்க்க முடியும். இந்தியாவில் ரிவர்ஸ் ஸ்விங் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் கலையில் பும்ரா மிகச் சிறந்தவராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : கண்ணீரோடு ஓய்வு.. அடுத்த நாள் ஆஸிக்கு எதிராக ஃபீல்டிங்.. நீல் வாக்னர் என்ன நடக்கிறது

அவர் சரியான வேகம் மற்றும் துல்லியத்தை கொண்ட பந்துவீச்சாளர். போப்புக்கு எதிராக அவர் வீசிய ஒரு யார்க்கரையும் பார்த்தோம். அவர் கடைசியாக அதையும் வீசி சாதித்தார். அவர் முதல் நிலை பந்துவீச்சாளராக வந்தது வெறும் சாதாரண விஷயம் கிடையாது. அவர் உலகத்தரம் வாய்ந்தவர், அதனால்தான் அந்த இடம் அவருக்கு கிடைத்திருக்கிறது. எங்கள் பார்வையில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் எந்த ஆச்சரியமும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.