பிசிசிஐ ஹர்திக்கை சூப்பர் ஸ்டார் மாதிரி நடத்துறத நிறுத்துங்க.. ஆஸியை பார்த்து திருந்துங்க – இர்பான் பதான் விமர்சனம்

0
79
Irfan

இந்தியாவில் மே மாதம் இறுதியில் ஐபிஎல் தொடர் முடிவடைய, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இதை ஒட்டி எப்படியான அணி அமைய வேண்டும் என இர்பான் பதான் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவின் ஒட்டுமொத்த செயல்பாடு மிகச் சுமாராக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவருடைய இடத்தில் சிவம் துபே இடம் பெற வேண்டும் என வெளியில் இருந்து நிறைய கருத்துக்கள் வர ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியா சரியான உடல் தகுதியில் இல்லை, அவர் எதையோ மறைக்கிறார் என சைமன் டால் போன்ற வெளிநாட்டு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஐபிஎல் தொடரில் சந்தேகம் தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவை சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பற்றி இர்பான் பதான் கூறும்பொழுது ” ஹர்திக் பாண்டியாவை பற்றி நான் நினைப்பது என்னவென்றால் நாம் இன்னும் ஒரு உலகக் கோப்பை கூட வெல்லாமல் சில காலமாக இருப்பதால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். சர்வதேச அளவில் ஒரு ஆல் ரவுண்டர் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹர்திக் பாண்டியா அப்படி எதுவும் செய்யவில்லை. நாம் அவரின் திறன்என்னவென்று மட்டுமே சிந்திக்கிறோம்.

ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளை நாம் குழப்பிக் கொள்கிறோம். இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. முதலில் அவர் ஒரு ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாட வேண்டும். தனிநபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதை பிசிசிஐ நிறுத்திக் கொள்ள வேண்டும். தனிப்பட்டவர்களை சூப்பர் ஸ்டார் ஆக நடத்தினால் பெரிய தொடர்களை வெல்ல முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் டாஸ்ல எடுத்த முடிவு சரிதான்.. நாங்க தவறவிட்டது எந்த இடத்துலதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக செய்து வருவது என்னவென்றால், அவர்கள் ஒரு அணியாக சேர்ந்து விளையாடுவதை விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு சூப்பர் ஸ்டாரை உருவாக்குவதில்லை. அவர்கள் எல்லோரையுமே சூப்பர் ஸ்டார்களாக உருவாக்குகிறார்கள். இப்படி செய்யாவிட்டால் பெரிய போட்டிகளில் நிச்சயம் வெற்றி பெற முடியாது” என்று கூறியிருக்கிறார்.