நான் டாஸ்ல எடுத்த முடிவு சரிதான்.. நாங்க தவறவிட்டது எந்த இடத்துலதான் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
977
Hardik

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது தற்பொழுது விமர்சனம் ஆகி வருகிறது. தோல்விக்கு பின் இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ஆஸ்திரேலியா இளம் துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் அபாரமாக விளையாடி வெறும் 27 பந்தில் 87 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக டெல்லி அணி 20 ஓவர்களில் 257 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திலக் வருமா கடைசி ஓவர் வரை போராடி 63 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவரால் தனது அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.

இன்று பகலில் நடந்த போட்டி என்பதாலும், மேலும் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் என்பதாலும், டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்வது சாதகமான ஒன்றாக இருக்கும். ஒருவேளை ஆடுகளம் இரண்டாம் பகுதியில் வேகம் குறையலாம், வீரர்கள் முழு வெயிலில் விளையாடுவதை தவிர்க்கலாம், மேலும் ரன்னை துரத்தும் அழுத்தம் இருக்காது. ஆனால் இப்படி இருந்தும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தது தற்போது விமர்சனம் ஆகிறது.

இதுகுறித்து போட்டிக்கு பின் பேசியுள்ள ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “தற்போது போட்டிகள் மிகவும் நெருக்கமாகி கொண்டே வருகின்றன. முன்பு ஒரு போட்டியில் இரு அணிகளுக்கும் இரண்டு ஓவர்கள் வித்தியாசமாக இருந்தது. தற்பொழுது இரண்டு பந்துகள்தான் வித்தியாசமாக இருக்கிறது. எங்கள் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்கின்ற காரணமாக, நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்து பொறுப்பை பேட்ஸ்மேன்கள் எடுத்துக் கொள்ள முடிவு செய்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா பவுலிங் வீடியோவ தினமும் பார்த்தேன்.. ரொம்ப பதட்டமா இருந்தது.. ஆனால்.. – ஜாக் பிரேசர் மெக்கர்க் பேட்டி

நான் இந்த போட்டியில் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் மிடில் ஓவர்களில் கொஞ்சம் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம். இடது கை பேட்ஸ்மேன் அக்சர் படேலை நன்றாக விளையாடி இருக்கலாம். இது விளையாட்டு விழிப்புணர்வின் அடிப்படையில் நாங்கள் தவறவிட்ட ஒன்று. ஜாக் பிரேசர் அபாரமாக விளையாடினார். இது இளைஞர்கள் பயம் இல்லாமல் இருப்பதை காட்டுகிறது. டாசில் எடுத்த முடிவு சரியானதுதான்” என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்