மில்லரின் சர்ச்சை கேட்ச்.. பவுண்டரி லைன் நகர்த்தி வைக்கப்பட்டதன் ரகசியம்.. வெளிவந்த உண்மை காரணம்

0
37774

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி தற்போது மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது. இறுதிப் போட்டியில் விராட் கோலி, பும்ரா மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகியோர் சிறப்பாக விளையாடியிருந்தாலும், இறுதி ஓவரில் சூரியகுமார் யாதவ் பிடித்த அற்புதமான கேட்ச் ஆட்டத்தை மாற்றியது.

அவர் அந்த கேட்சை பிடித்த போது எல்லைக் கோட்டின் அருகே இருந்த பவுண்டரி லைன் நகர்த்தி வைக்கப்பட்டிருந்ததால் சர்ச்சை உருவான நிலையில் அதற்கான உண்மையான காரணம் வெளிவந்திருக்கிறது.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்கா அணி விளையாடிக் கொண்டிருந்தபோது இறுதி ஓவரில் ஆறு பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச வந்த துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் பந்தினை டேவிட் மில்லருக்கு புல்டாஸ் ஆக வீச அதை நேராக தூக்கி அடித்த மில்லர் லாங் ஆன் திசையில் எல்லைக்கோட்டின் அருகே நின்று கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் பௌண்டரி லைனுக்கு அருகே சென்று அதனை அற்புதமாக கேட்ச் பிடித்து சற்று நிலை தடுமாறும் நிலையில் பந்தை அப்படியே காற்றில் வீசிவிட்டு பவுண்டரி லைனிற்கு உள்ளே சென்று திரும்ப வெளியே வந்து அந்த பந்தை மீண்டும் பிடித்தார்.

அந்த ஒரு கேட்ச்தான் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லவும் வழிவகுத்தது. இந்த சூழ்நிலையில் அவர் கேட்ச் பிடித்தபோது பவுண்டரி லைன் எல்லைக் கோட்டிற்கு பின்னால் இருப்பது போன்று காட்சியளித்தது. எனவே இது கேட்ச் பிடித்தபோது நகர்த்தப்பட்டதா? பௌண்டரி லைன் பின்னால் இருப்பதற்கான காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையான நிலையில் அதற்கான உண்மை காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது பவுண்டரி லைனுக்கு முன்னால் இருக்கும் எல்லைக்கோடு, உண்மையான எல்லைக்கோடு அல்ல எனவும், முழு இறுதிப்போட்டியிலும் எல்லைக் கயிறு போடப்பட்ட மார்க்குக்கு பின்னால்தான் இருந்ததாகவும் ஐசிசி தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.இதற்கான காரணம் போட்டிக்காக பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தின் எல்லை அளவு சிறியதாக இருந்த காரணத்தால் அதை சற்று பெரிது படுத்தவே பவுண்டரி லைனை பின்னால் வைத்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து சர்ச்சை எழுப்பிய நிலையில் அதற்கான விளக்கத்தையும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் அதற்கான விளக்கத்தை கொடுத்து பதிலடி தந்திருந்தார்.

இதையும் படிங்க:இந்தியாவிடம் தோற்றதை.. நாங்கள் ஒரு போதும் அவமானமாக நினைக்கவில்லை.. ஏனெனில் அதற்கு காரணம் இதுதான்- ராப் கீ பேட்டி

தற்போது இருந்த பவுண்டரி லைன் சர்ச்சையும் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அதற்கான முழு விளக்கமும் தற்போது வெளிவந்துள்ளது. வெஸ்ட் இண்டீசில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை இரண்டாம் தேதி டெல்லி வந்தடையுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.