டிராவிட் அதை செய்யாதப்ப திகைத்துப் போனேன்.. ஆனா இப்ப கம்பீருக்கு பெரிய பிரஷரை உருவாக்கிட்டாரு – மைக்கேல் வாகன் பேச்சு

0
1123
Vaughan

இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல, அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது. இது தொடர்பில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இருக்கிறது. மேலும் அவர் புதிய பயிற்சியாளராக வரும்பொழுது கோப்பையை வென்று இருந்தாலும் அழுத்தம் இருக்கும் என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

இந்தியா அணிக்கு ரவி சாஸ்திரிக்கு பிறகு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்று மூன்று வடிவ கிரிக்கெட்டில் இரண்டு வடிவங்களில் இறுதி போட்டியிலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் அரையிறுதியிலும் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இப்படியான நிலையில் அங்கிருந்து நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

தற்போது ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக, அதே நேரத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இதன் காரணமாக டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணியை புதிதாக உருவாக்க வேண்டிய இடத்தில் புதிய பயிற்சியாளராக வரக்கூடியவர் இருக்கிறார்.

இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்ததும், இந்திய அணி மிகச் சிறப்பான நிலைமைக்கு செல்ல போகிறது என்று நான் நினைத்தேன். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பைகளில் பெரிய அளவில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றாத பொழுது திகைத்துப் போனேன். அதே சமயத்தில் ராகுல் டிராவிட் காலத்தில் இந்திய அணி சீராக மாறியது. அவர் செயல் முறையில் மிகுந்த கவனத்தை செலுத்தினார்.

இதன் காரணமாக இந்திய அணி எப்பொழுதும் வெற்றியில் சீராகவே இருந்து வந்தது. அதே சமயத்தில் அவர்கள் எப்பொழுது ஆவது அரிதாகவே தோற்றார்கள். அவர்களுக்கு எப்பொழுதாவதுதான் மோசமான வாரம் அமைந்தது. அதுவும் எதிரணி மிகச் சிறப்பான முறையில் விளையாடிய பொழுதுதான் அவர்களுக்கு அப்படி தோல்விகள் வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் ஓய்வு.. 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவாரா ரோஹித்.? அவரே அறிவித்த சூசக பதில்

தற்பொழுது ராகுல் டிராவிட் அணியை மிகச் சிறப்பான முறையில் உருவாக்கி வெளியேறுகிறார். இந்திய அணி கோப்பையை கைப்பற்றி விட்டது. எனவே அடுத்து பயிற்சியாளராக வரும் கம்பீருக்கு நிச்சயம் சவால்கள், அழுத்தம் இருக்கிறது. அவர் இளமையும் அனுபவம் கொண்ட ஒரு அணி அவருக்கு கிடைக்கும். அதை அவர் மேற்கொண்டு உருவாக்க வேண்டும். இப்போதைக்கு பயிற்சியாளர் ஆவதற்கு சிறந்த அணி இந்தியாதான்” என்று கூறியிருக்கிறார்.