இந்தியாவிடம் தோற்றதை.. நாங்கள் ஒரு போதும் அவமானமாக நினைக்கவில்லை.. ஏனெனில் அதற்கு காரணம் இதுதான்- ராப் கீ பேட்டி

0
12404

இந்த டி20 உலக கோப்பையில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தோடு களம் இறங்கிய இங்கிலாந்து அணி அரை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் 68 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்து உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியிடம் தோற்றதை நாங்கள் ஒருபோதும் அவமானமாக நினைக்கவில்லை என்று இங்கிலாந்து அணியின் தலைவர் ராப்கீ அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

2022 டி20 உலக கோப்பை சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி தொடக்கத்தில் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும் அதன் பிறகு தனது அபாரமான பேட்டிங்கால் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று இந்திய அணிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் மோதியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. இது இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை பார்க்கும் போது இந்த இலக்கு எட்ட கூடியதுதான் என்ற வகையிலேயே அனைவரும் நினைத்தனர்.

ஆனால் அந்தப் போட்டியில் இந்தியாவின் அபாரமான பந்து வீச்சினால் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக தொடரில் இருந்தும் வெளியேறியது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைவரான ராப்கீ இந்திய அணி உலகின் மிகச் சிறந்த அணி என்றும் அந்த அணிக்கு எதிராக நாங்கள் தோற்றது அவமானமாக கருதவில்லை எனவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு வரும்போது நான் மோசமான அறிகுறியாக நினைக்கவில்லை. முக்கியமான கட்டத்தில் தோல்வி அடைந்ததால் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்று தெரியும். சில சமயங்களில் நாங்கள் நன்றாக செயல்பட்டோம். ஆனால் சில சமயங்களில் எங்களது சீரற்ற செயல்பாடு வெளிப்பட்டது. இந்திய அணியிடம் தோற்றத்தை நான் அவமானமாக நினைக்கவில்லை.

- Advertisement -

ஏனென்றால் அவர்கள் கடந்த இரண்டு வருடங்களாக உலகின் மிகச் சிறந்த அணியாக இருக்கிறார்கள். மற்ற அணிகளும் அவர்களை பின் தொடர்ந்து செல்கிறார்கள். அரையிறுதியில் நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் அது எங்களை இன்னும் நல்ல மனநிலையில் வைத்திருக்கும்” என்று கூறியிருக்கிறார். அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நான் திணறி போயிட்டேன்.. என்னால ஜீரணிக்க முடியல.. வார்த்தையே இல்லாம இருக்கேன் – டேவிட் மில்லர் உருக்கம்

இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணியில் சில பெரிய வீரர்களின் பெயர்கள் கூட அடுத்தடுத்த தொடர்களில் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இங்கிலாந்து அணியின் எதிர்காலம் என்ன என்பது குறித்து அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.