இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் பிரான்சிஸ் கிரிக்கெட் லீக்கின் தாக்கத்தால் உலகெங்கிலும் பல்வேறு கிளப் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவிலும் எம்எல்சி என்று அழைக்கப்படும் லீக் கிரிக்கெட் தொடர் 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது இரண்டாவது சீசன் இந்திய நேரப்படி வருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இந்த சீசனில் மொத்தம் ஆறு அணிகள் பங்கு பெற இருக்கின்றன. இது ஜூலை 6ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 29ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற இருக்கிறது.
இதில் ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு சொந்தமான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சொந்தமாக டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமாக எம்ஐ நியூயார்க் அணியும், டெல்லி அணிக்கு சொந்தமாக சியாட்டில் ஆர்காஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதன் முதல் போட்டியாக ஜூலை 6ஆம் தேதி முந்தைய சீசனில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய எம்ஐ நியூயார்க் அணி, சியாட்டில் ஆர்காஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இதில் சென்னை அணியின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் ஜூலை 6ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை காலை 6:00 மணிக்கு எதிர்கொள்ள உள்ளது. அதன் பிறகு ஜூலை 9ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை மோரிஸ் வில்லே நகரில் எதிர்கொள்ள உள்ளது. ஜூலை 11ஆம் தேதி அதே மைதானத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான் அணியையும், 13ஆம் தேதி எம்ஐ நியூயார்க் அணியையும், ஜூலை 15ஆம் தேதி இதே அணியோடு காலை 6:00 மணிக்கும், ஜூலை இருபதாம் தேதி வாஷிங்டன் அணியோடும், 24ஆம் தேதி சியாட்டில் ஆர்காஸ் அணியோடும் விளையாட இருக்கிறது.
ஜூலை 25ஆம் தேதி எலிமினேட்டர் போட்டியும், அடுத்த இரண்டு நாட்களில் குவாலிபயர் போட்டிகளும் டல்லாஸ் நகரில் காலை 6:00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதன் இறுதிப்போட்டி இதே டல்லாஸ் நகரில் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இந்த சீசனில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் ஆன டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் மில்லர், போன்ற வீரர்கள் இந்த சீசனில் விளையாட இருக்கிறார்கள். இதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே,ஃபாஃப் டு பிளெசிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், இம்ரான் தாஹிர், டேனியல் சாம்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க:டிராவிட் அதை செய்யாதப்ப திகைத்துப் போனேன்.. ஆனா இப்ப தம்பி இருக்கு பெரிய பிரஷரை உருவாக்கிட்டாரு – மைக்கேல் வாகன் பேச்சு
இந்த ஆண்டுக்கான இந்திய ஒளிபரப்பு உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இதன் போட்டிகளை கண்டுகளிக்கலாம். மொபைலில் ஜியோ நிறுவனம் இதன் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
The 2024 Major League Cricket schedule is here 🙌
— Niche Sports (@Niche_Sports) May 7, 2024
📷: MLC #MLC2024 #MajorLeagueCricket #T20Cricket #CricketTwitter pic.twitter.com/rSHEGHaZ33