ரோகித் சர்மா தலைமையிலான இந்தியனை டி20 உலக கோப்பை தொடரை வென்று ஐந்தாவது நாளாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய இளம் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை நாளை மறுநாள் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் துஷார் தேஷ்பாண்டே முதல் வாய்ப்பு குறித்து பேசி இருக்கிறார்.
நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சிஎஸ்கே அணிக்காக கடந்த மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட சிவம் துபே இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். சிஎஸ்கே உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஒரு வீரரை இங்கிருந்து அனுப்பியிருக்கிறது.
இதற்கு முன்பாக சிவம் துபேவின் கிரிக்கெட் வாழ்க்கை இந்திய அணியில் தொடர்வதற்கு வாய்ப்பே இல்லை என்கின்ற நிலைதான் இருந்தது. அவருக்கு இந்திய அணியில் கிடைத்த முதல் வாய்ப்பு மோசமான முறையில் முடிவுக்கு வந்திருந்தது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு அவர் வந்த பிறகு சிறந்த முறையில் மெருகேற்ற பட்டு, இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது மட்டுமில்லாமல், உலகக் கோப்பை இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்து, மேலும் உலக கோப்பை இந்திய அணிகள் விளையாடும் வாய்ப்பையும் பெற்று தற்பொழுது கோப்பையையும் அணி வென்று விட்டது.
இந்த நிலையில் அடுத்து இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு புதிய இந்திய அணியை தயார் செய்யும் விதமாக புது வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். தற்பொழுது இதற்கான பட்டியலில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் துஷார் தேஷ்பாண்டேவைதேர்வு செய்திருக்கிறார்கள். இரண்டாவது முறையாக அடுத்த கட்ட டி20 உலக கோப்பைக்கும் ஒரு வீரரை சிஎஸ்கே அணி அனுப்பி இருக்கிறது. சிஎஸ்கே அணி அனுப்பும் வீரர்கள் எல்லாமே யாருடைய கவனத்திலும் இல்லாதவர்கள் என்பதுதான் இதில் சிறப்பு.
இந்த நிலையில் இந்திய அணியில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு குறித்து பேசி இருக்கும் துஷார் தேஷ் பாண்டே கூறும் பொழுது ” இந்திய அணியுடன் நான் பயணிப்பேன் என்பது மெல்ல மெல்ல தற்பொழுது செயலாகி வருகிறது. இது எனக்கு ஒரு கனவு நனவாகும் தருணம். இது என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒருநிகழ்வு.
இதையும் படிங்க : வந்தாச்சு குட்டி ஐபிஎல்.. அமெரிக்க எம்எல்சி 2024 அட்டவணை.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. முழு விவரம்
இப்படி முதல்முறையாக நடக்கக்கூடிய விஷயங்கள் எல்லாமே சிறப்பு வாய்ந்தது. நாட்டிற்காக விளையாடுவது எப்பொழுதும் சிறப்பு வாய்ந்த விஷயம். இதில் வீரர்களுடன் பயணிக்கும் பொழுது நாம் அனுபவிக்கும் வேடிக்கையான சம்பவங்கள் அருமையான ஒன்று” எனக் கூறியிருக்கிறார்.






