KKR vs LSG: பச்சை மெரூன் நிற ஜெர்சியில் களம் இறங்கும் லக்னோ அணி.. விசித்திர காரணம்

0
32

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் 28வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மோதுகின்றன. ஆனால் இந்த போட்டியில் லக்னோ அணி வீரர்கள் வழக்கத்திற்கு மாறாக புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளனர்.

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை ஐந்து போட்டியில் விளையாடியுள்ள அணி மூன்று போட்டியில் வெற்றி பெற்றும், இரண்டு போட்டிகளில் தோல்வியையும் தழுவி இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக லக்னோனி தோல்வி அடைந்திருந்தது. எனவே இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். எனவே தற்போது புள்ளி பட்டியலில் லக்னோ அணி நான்காவது இடத்தில் இருக்கிறது.

இந்த ஐபிஎல்லில் வலுவாக காணப்படும் மற்றொரு அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியை தழுவி இருக்கிறது. அந்த ஒரு போட்டியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தது. எனவே மீண்டும் தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப கொல்கத்தா அணி முயற்சிக்கும்.

எனவே இந்த இரண்டு அணிகளும் வலுவாக இருப்பதால், இப்போட்டியில் பரபரப்பாக பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் வழக்கமாக லக்னோ அணி அடர் நீல நிற ஜெர்சியிலேயே களம் இறங்கும். ஆனால் இப்போட்டியில் பச்சை மற்றும் மெரூன் நிறம் கலந்த பிரத்யேக ஜெர்சியில் விளையாடும் என்று லக்னோ அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ அணியின் கால்பந்தாட்ட கிளப் அணியான மோகன் பகான் சூப்பர் ஜெயின்ஸ் அணியின் ஜெர்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பச்சை மற்றும் மெரூன் நிறம் கலந்த புதிய ஜெர்சியில் இன்று களமிறங்குகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மோகன் பகான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் மோகன் பகான் சூப்பர் ஜெயின்ஸ் அணியின் உரிமையாளராக ஆர். பி. எஸ். ஜி குழுத்தலைவராக சஞ்சீவ் கோயங்கா இருக்கிறார். இந்த இரண்டு அணிகளுமே ஒருவருக்கு சொந்தமானது என்பதால் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புதிய ஜெர்சியுடன் லக்னோ அணி களம் இறங்கும்.

இதையும் படிங்க: தோனி இத செய்ற மாதிரி தெரியல.. ஜடேஜா சூர்யா மோதல்ல இவர்தான் ஜெயிப்பாரு – இர்பான் பதான் கணிப்பு

எனவே தோல்வி பாதையில் இருக்கிற இரண்டு அணிகளும் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப கடுமையாக போட்டி போடும் என்பதில் சந்தேகம் இல்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த தொடரில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.