தோனி இத செய்ற மாதிரி தெரியல.. ஜடேஜா சூர்யா மோதல்ல இவர்தான் ஜெயிப்பாரு – இர்பான் பதான் கணிப்பு

0
126
Dhoni

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இரண்டு பெரிய அணிகள் மோதிக் கொள்வதால் ரசிகர்களுக்கு இடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் தோனி பேட்டிங் ஆர்டரில் மேலே வருவாரா? ஜடேஜா சூரியகுமார் யாதவ் மோதலில் யார் ஜெயிப்பார்கள்? என்பது குறித்து இர்பான் பதான் பேசியிருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தோனி பேட்டிங் ஆர்டரில் மேலே வருவதில்லை. கடைசி இரண்டு ஓவர்களுக்கு வரும்படி தன்னுடைய பேட்டிங் ரோலை சுருக்கி இருக்கிறார். அதே சமயத்தில் அவர் அந்த இரண்டு ஓவர்களில் எதிர்பார்க்கும் தாக்கத்தை கொடுக்கக்கூடிய அளவில் பெரிய ஷாட் விளையாடுகிறார். அவருடைய பேட்டிங் டச் மிக நன்றாக இருக்கிறது. மேலும் ஸ்டெம்பை நோக்கி குறி வைத்து பந்தை வீசும் ஜடேஜாவுக்கும், மைதானத்தின் எல்லா பக்கத்திலும் பந்தையடிக்கும் சூரியகுமார் யாதவுக்குமான போட்டியும் சுவாரசியமானது.

- Advertisement -

இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் “தோனி மேலே வர வேண்டும் என்று எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். தற்போது அவருக்கு 42 வயதாகிறது. அவர் தன்னை எப்படி பராமரித்துக் கொள்கிறார் என்பதில்தான் அவர் இன்னும் இளமையாக இருக்கிறார். முன்பு ஆரம்பத்தில் பத்து ஓவர்கள் தாண்டி வந்து ஆட்டத்தை அமைத்து எடுத்துச் சென்று முடிப்பார்.

இப்பொழுது கடைசி இரண்டு மூன்று ஓவர்களுக்கு வந்து பெரிய ஷாட் விளையாடி ஆட்டத்தை முடிக்கும் படி தன்னுடைய ரோலை சுருக்கிக் கொண்டு இருக்கிறார். எனவே அவர் பேட்டிங் ஆர்டரில் மேலே வருவார் என்று நான் நினைக்கவில்லை. அப்படி அவர் மேலே வந்தால் அது எல்லோருக்கும் நல்ல விஷயமாக இருக்கும்.

சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்யும்பொழுது ரவீந்திர ஜடேஜா பந்து வீசும் இடத்தில் இருப்பதால் இருவருக்கும் இடையே ஆன போர் சுவாரசியமாக இருக்கும். ரவீந்திர ஜடேஜா பந்தை ஸ்டெம்ப் லைனில் வீசக்கூடியவர். அதே சூரியகுமார் யாதவ் எல்லா பக்கத்துக்கும் சென்று பந்தை அடிக்கக் கூடியவர்.

- Advertisement -

இதையும் படிங்க: பும்ரா கிட்ட பேசினப்ப ஒரு விஷயத்தை சொன்னார்.. மிரண்டு போயிட்டேன்.. சிஎஸ்கே தப்பிக்கிறது கஷ்டம் – அஸ்வின் பேச்சு

சூரியகுமார் யாதவ் பந்துடன் மட்டுமில்லாமல் பந்துவீச்சாளரின் மனநிலையுடனும் விளையாடுவார். ஆனால் இந்த போட்டியில் அவருக்கு முன்னால் இருக்கும் ஜடேஜா பெரிய பந்துவீச்சாளர். அதேசமயத்தில் போட்டி மும்பையில் நடக்கின்ற காரணத்தினால், இந்தப் போரில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் சூரியகுமாருக்கே இருக்கிறது. மேலும் ஆடுகளமும் பேட்டிங் செய்ய வசதியாக இருக்கிறது” என்று கூறி இருக்கலாம்.