சிஎஸ்கே அறிமுக வீரர் ரச்சின் விக்கெட்.. கோபமாக வழி அனுப்பிய கோலி.. நடந்தது என்ன.?

0
17391
Rachin Ravindra and Kohli

17-வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா நேற்று சென்னையில் கோலாகலமாகத் தொடங்கி இருக்கிறது. இதில் ருத்ராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் களத்தில் மோதின.

இரு அணிகளுக்குமே பெரும் ரசிகர் பட்டாளம் இருப்பதால் நேற்று மைதானம் முழுக்கவே ரசிகர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மேலும் இணையதளங்களின் வாயிலாக போட்டியைக் காண்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. நினைத்ததை போலவே நேற்று ரசிகர்களுக்கும் முதல் போட்டி பெரிய விருந்தாகவே அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேறினாலும், பின்னால் வந்த அனுஜ்ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் நிலையாக பேட்டிங் செய்து பெங்களூர் அணியின் ரன் வேட்டையை உயர்த்தினர். இப்போட்டியில் விராட் கோலி அவுட் ஆன விதம் சுவாரசியமாக இருந்தது. பன்னிரண்டாவது ஓவரில் முஸ்தபிக் ரகுமான் வீசிய பந்தை விராட் கோலி லாங் ஆன் திசையில் சிக்சருக்கு தூக்கி அடிக்க, அதனை ரகானே மற்றும் இரட்ச்சின் ரவீந்திரநாத் மிக அருமையாக கேட்ச் பிடித்து விராட் கோலி வெளியேற்றினார்கள்.

இதனை சற்றும் எதிர்பாராத கோலி இதனை நம்ப முடியாத வரை களத்தில் இருந்து வெளியேறினார். அப்போதுதான் ரன் விகிதத்தை அதிகப்படுத்த நினைத்தார் என்றும் குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்த போதிலும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடனே பெங்களூரு அணி களமிறங்கியது.

கோலி மற்றும் ரச்சின் ரவீந்திரா

சென்னை அணிக்காக தனது முதல் சீசனில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா பேட்டிங் மிக அருமையாக இருந்தது. நியூசிலாந்து நாட்டில் தற்போது வாழ்ந்தாலும் இந்திய அணியை பூர்வீகமாகக் கொண்டிருப்பதால் அவரது பேட்டிங் இந்திய அணி வீரர்களின் பேட்டிங் போலவே இருந்தது. முதல் போட்டியில் விளையாடிய போதும் சற்றும் பயமின்றி மிகவும் ரிலாக்சாக பந்துகளை எதிர் கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க: சிஎஸ்கே ஆர்சிபி போட்டி.. பெரிய ரன் இல்லை.. ஆனால் ஐபிஎல் வரலாற்றில் பெரிய சாதனை

15 பந்துகளை சந்தித்த அவர் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என விளாசி சென்னை அணியின் வெற்றியை சற்று எளிதாக்கி கரண் ஷர்மாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது பெங்களூர் அணியின் விராட் கோலி அவரை சற்று ஆக்ரோஷமாக வழி அனுப்பி வைத்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஒரு அனுபவ மூத்த வீரர், ஒரு இளம் வீரரை இப்படியா வழி நடத்துவது? என்றும், கோலி பேட்டிங் செய்தபோது அவரின் விக்கட்டை ரச்சின் ரவிந்திரா மற்றும் ரகானே வீழ்த்தியதால், அந்தக் கோபத்தில் இவ்வாறு செய்கிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.