400 கோடி சும்மா சம்பாதிக்கிறாங்க.. ஐபிஎல் முதலாளிகள் வீரர்களை பற்றி கவலைப்படுவதில்லை – சேவாக் விமர்சனம்

0
799
Sehwag

இந்த முறை ஐபிஎல் சீசனில், லக்னா அணியின் உரிமையாளர் அந்த அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் இடம் நடு மைதானத்தில் விவாதம் செய்தது பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. தற்பொழுது இது குறித்து வீரேந்திர சேவாக் தன்னுடைய கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் லக்னோ முதலில் பேட்டிங் செய்து மிகவும் மெதுவாக விளையாடி 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இப்படியான நிலையில் திருப்பி விளையாடிய ஹைதராபாத் அணி இலக்கை வெறும் 9.4 ஓவர்களில் எட்டி ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக லக்னோ அணியின் டாப் ஆர்டர்கள் விளையாடிய விதம், அந்த அணியின் உரிமையாளருக்கு அதிருப்தியை உருவாக்கியது. இதன் காரணமாக அவர் நடு மைதானத்தில் கேப்டன் கேஎல்.ராகுல் உடன் விவாதத்தில் ஈடுபட்டார். இதுதான் தற்பொழுது பெரிய விமர்சனம் ஆகி வருகிறது.

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “உரிமையாளர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களை ஊக்குவிக்க வேண்டும். வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் முடிவுகளில் தலையிட்டு அணி உரிமையாளர்கள் கேள்வி கேட்க துவங்கும் பொழுது விஷயங்கள் மோசமாக மாறிவிடும். அணி உரிமையாளர்கள் எந்த வீரர்களையும் நோக்கி விரல் நீட்டி கேள்வி கேட்க முடியாது.

இவர்கள் அனைவருமே வியாபாரிகள். இவர்கள் லாப நஷ்டத்தை மட்டுமே கணக்கு போடுகிறார்கள். எந்த பெரிய வேலைகளையும் செய்யாமல் வருடத்திற்கு 400 கோடி சம்பாதிக்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு வியாபாரம். எனவே அவர்கள் வீரர்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ஜடேஜாவுக்கு ரன் அவுட் கொடுத்தது சரியா?.. என்ன மாதிரி கதை இது – மைக் ஹசி ஓபன் பதில்

அணி உரிமையாளர்களின் வேலை வீரர்களை ஊக்குவிப்பு செய்வதாக இருக்க வேண்டும். இப்படி வீரர்களிடம் நடந்து கொண்டால் எந்த வீரரும் அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். உங்கள் அணியை விட்டு ஒரு வீரர் வெளியேறினால், நீங்கள் பூஜ்ஜியம் ஆகிவிடுவீர்கள். நான் பஞ்சாப் உடன் இருந்த பொழுது அவர்கள் ஐந்தாவது இடத்தில் இருந்தார்கள். நான் அந்த அணியை விட்டு வெளியேறிய பிறகு, அவர்கள் ஐந்தாவது இடத்தை அடையவில்லை” என்று கூறி இருக்கிறார்.