17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ள இருந்த காரணத்தினால், ரசிகர்களிடம் மிக அதிகபட்ச எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்றதும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியது.
இதற்கடுத்து அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் அதிரடியாக விளையாட பவர் பிளேவில் 4.2 ஓவரில் 41 ரன்கள் வந்தது. அடுத்த பந்தில் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து விராட் கோலி 21 ரன், ரஜத் பட்டி தார் மற்றும் மேக்ஸ்வெல் ரன் ஏதும் இல்லாமலும், கேமரூன் கிரீன் 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்கள்.
அடுத்து வந்த அனுஜ் ராவத் 48 ரன்கள், அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் ஆரம்பிக்கட்டு இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. எனவே ஏதாவது வெற்றிக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருத்ராஜ் 15, ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, டேரில் மிட்சல் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்குப் பிறகு வந்த சிவம் துபே பொறுமையாக விளையாடிய ஆட்டம் இழக்காமல் 34, இவருடன் சேர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா 25 ரன்கள் எடுக்க, 18.4 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக ஆர்சிபி அணியை தோற்கடித்தது.
வினோத சாதனை
இந்தப் போட்டியில் அரை சதம் அடிக்கக்கூடிய வாய்ப்பில் முதலில் ஆர்சிபி அணியின் அனுஜ் ராவத் இருந்தார். 48 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்த அவருக்கு கடைசி இரண்டு ஓவர்களில் விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதேபோல் சிஎஸ்கே தரப்பில் 15 பந்தில் அதிரடியாக 37 ரன்கள் எடுத்த ரச்சின் ரவீந்தராவுக்கு அரைசதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இருவருமே இதை தவற விட்டார்கள். மேலும் இரு அணியில் இருந்தும் எந்த வீரர்களும் இந்த போட்டியில் அரைசதம் அடிக்கவில்லை. அரைசதம் அடிக்காமல் இரண்டு அணிகளும் சேர்த்து 349 ரன்கள் எடுத்தன. இந்த வகையில் எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காமல் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட சாதனை போட்டியாக ஐபிஎல் வரலாற்றில் இந்தப் போட்டி பதிவானது.
இதையும் படிங்க : ருதுராஜும் ரகானேவும் வேற மாதிரி.. ஆனா நான் நல்லா அடிக்கிறேனு சொல்ல முடியாது- ரச்சின் ரவீந்தரா பேட்டி
இரண்டு அணியிலும் எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காமல் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் :
சிஎஸ்கே- ஆர்சிபி – 2024 – 349 ரன்கள்
குஜராத் லயன்ஸ் – புனே – 2017 – 343 ரன்கள்
கேகேஆர் – சிஎஸ்கே – 2021 – 343 ரன்கள்
பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 2014 – 342 ரன்கள்
ஹைதராபாத் – கேகேஆர் – 2023 – 337 ரன்கள்