தோத்தாலும் பெருமைப்படறேன்.. இந்த ஐபிஎல்-ல ஒரு விஷயத்தை கண்டுபிடிச்சி இருக்கோம் – பாப் டு பிளேசிஸ் பேட்டி

0
1077
Faf

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த முக்கிய போட்டியில் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் தோற்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு விராட் கோலி 24 பந்தில் 33 ரன்கள், ரஜத் பட்டிதார் 22 பந்தில் 34 ரன்கள், மகிபால் லோம்ரர் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. ஆவேஸ் கான் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 30 பந்தில் 45 ரன், ரியான் பராக் 26 பந்தில் 36 ரன் எடுக்க, அந்த அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

17 வருடமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் முன்னணி அணியான ஆர்சிபி அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து சோகத்துடன் வெளியேறி இருக்கிறது. ஆனாலும் லீக் சுற்றில் கடைசி ஆறு போட்டிகளை வென்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்திருக்கிறது.

தோல்விக்கு பின் பேசிய ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளேசிஸ் “ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் பனி வருகின்ற காரணத்தினால் நாங்கள் ஸ்கோர் கொஞ்சம் குறைவாக இருப்பதை உணர்ந்து. நாங்கள் தேவைப்படும் ஸ்கோருக்கு 20 ரன்கள் எடுக்க தவறி விட்டோம். ஆனால் எங்கள் வீரர்கள் மிகவும் சிறப்பாக போராடினார்கள். இதற்கான பெருமை அவர்களுக்கு சேரும். இந்த ஆடுகளத்தை பார்க்கும் பொழுது 180 ரன்கள் என்று நாம் நினைக்க முடியும். ஆனால் ஆடுகளம் முதலில் விளையாடும் பொழுது மெதுவாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 17 வருட சோகம்.. எலிமினேட்டரில் ஆர்சிபி வெளியேறியது.. ராஜஸ்தான் பரபரப்பான ஆட்டத்தில் அபார வெற்றி

ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் கண்டுபிடித்தது, ஒரு ஆடுகளத்திற்கு எவ்வளவு ரன்கள் தேவையோ அவ்வளவு ரன்கள் மட்டுமே எடுத்தால் போதாது என்பதைதான். ஏனென்றால் இம்பேக்ட் பிளேயர் விதியால் நீளமாகிறது. எங்களுடைய நிலையில் இருந்திருந்தால் மற்ற அணிகள் வெளியேறி இருக்கும். ஆனால் எங்கள் அணி சிறப்பாக போராடி ப்ளே ஆப் சுற்றும் வந்தது. இதுகுறித்து நான் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய குணாதிசயத்தைக் காட்டக்கூடியது. நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் எடுக்கும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை” என்று கூறி இருக்கிறார்.