17 வருட சோகம்.. எலிமினேட்டரில் ஆர்சிபி வெளியேறியது.. ராஜஸ்தான் பரபரப்பான ஆட்டத்தில் அபார வெற்றி

0
544
IPL2024

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதிக்கொண்டன. பரபரப்பான இந்த போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி ஆர்சிபி அணியை வீழ்த்தியது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் 14 பந்தில் 17 ரன்கள், விராட் கோலி 24 ரன்னில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து கேமரூன் கிரீன் 21 பந்தில் 27 ரன், ரஜத் பட்டிதார் 22 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். கடைசி கட்டத்தில் மகிபால் லோம்ரர் 17 பந்தில் 32 ரன் அதிரடியாக எடுத்தார். மேக்ஸ்வெல் மீண்டும் கோல்டன் டக் அடித்து ஏமாற்றம் கொடுத்தார். 20 ஓவர்களில் ஆர்சிபி அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஸ் கான் 3, அஸ்வின் 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு கோலர் கேட்மோர் 15 பந்தில் 20 ரன்கள், ஜெய்ஸ்வால் 30 பந்தில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். கேப்டன் சஞ்சு சாம்சன் 13 பந்தில் 17 ரன்கள் எடுத்தார். துருவ் ஜுரல் 8 பந்தில் 8 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு கொஞ்சம் நெருக்கடி உண்டானது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ரியான் பராக் 26 பந்தில் 36 ரன், சிம்ரன் ஹெட்மயர் 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் ஓவரில் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தார்கள். இதனால் போட்டியில் மீண்டும் பரபரப்பு உண்டாக 12 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் பெர்குஷன் வீசிய 19ஆவது ஓவரில் 14 ரன்கள் எடுத்து போட்டியை முடித்தார். நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை ராஜஸ்தான் அணி வென்றது.

- Advertisement -

இதையும் படிங்க : கண்டிப்பா அவுட்.. இல்லனா தினேஷ் கார்த்திக் அப்படி பண்ணிருக்க மாட்டாரு – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

இந்த தோல்வியின் மூலம் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது. இதற்கு அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது தகுதி சுற்றில் ஹைதராபாத் அணியை எதிர்த்து நாளை மறுநாள் ராஜஸ்தான் அணி விளையாட இருக்கிறது.