இந்திய அணியின் சாதனையை முறியடித்த ஆர்சிபி.. ஒட்டுமொத்த உலக டி20 அணிகளில் மெகா ரெக்கார்டு

0
200
RCB

இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், ஆர் சி பி அணிக்காக விராட் கோலி சதம் அடித்தார். இது அவருக்கு எட்டாவது ஐபிஎல் சதமாகும். இதே போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லர் சதம் அடித்தார். இந்தச் சதம் அவருக்கு ஆறாவது ஐபிஎல் சதமாகும். இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்து இருந்தாலும், உலக டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்தார். நின்று விளையாடி 72 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 113 ரன்கள் எடுத்தார். அதே சமயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் சதம் அடித்தார். மேலும் சதம் எடுக்க அடுத்த சிக்ஸர் மூலமாக ஆட்டம் இழக்காமல் அணியையும் வெல்ல வைத்தார்.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் ஐந்தாவது போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணிக்கு இது நான்காவது தோல்வியாக அமைந்திருக்கிறது. இந்த வருடம் அந்த அணியின் பேட்டிங் யூனிட்டில் விராட் கோலி தவிர வேறு யாரும் மேல் வரிசையில் இருந்து சிறப்பாக விளையாடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் எல்லோருமே ஏமாற்றம் தந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் விராட் கோலி இன்று ஆர்சிபி அணிக்காக பதிவு செய்த எட்டாவது சதம், ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் அந்த அணிக்கு 18வது சதமாக பதிவானது. கெயில் மற்றும் ஏபி.டிவில்லியர்ஸ் என ஜாம்பவான் வீரர்கள் அந்த அணிக்கு சதம் அடித்திருக்கிறார்கள். மேலும் 2022ஆம் ஆண்டு உள்நாட்டு வீரராக ரஜத் பட்டிதார் சதம் அடித்திருந்தார்.

ஆர்சிபி அணி சர்வதேச அணிகளுடன் சேர்த்து, உலக டி20 அணிகளில் அதிக சதங்கள் அடித்த அணியாக சாதனை படைத்திருக்கிறது. இதுவரை உலக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 17 சதங்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தது. தற்பொழுது இந்தச் சாதனையை ஆர்சிபி அணி 18 சதங்கள் எடுத்து முறியடித்து இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் மெதுவான சதம்.. கோலியை கிண்டல் அடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.. பட்லர் சாம்சனுக்கு பாராட்டு

உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த அணிகள் :

ஆர்சிபி – 18
இந்தியா – 17
பஞ்சாப் கிங்ஸ் – 14
ராஜஸ்தான் ராயல்ஸ் – 14
இங்கிலாந்தின் சோமர்செட் – 13