ஐபிஎல் வரலாற்றில் மெதுவான சதம்.. கோலியை கிண்டல் அடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.. பட்லர் சாம்சனுக்கு பாராட்டு

0
1292
Virat

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 67 பந்துகளில் சதம் அடித்தார். மேலும் 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இது அவருக்கு எட்டாவது ஐபிஎல் சதமாக பதிவானது. மேலும் 67 பந்துகளில் சதம் அடித்ததின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகள் எடுத்து மெதுவாக சதம் அடித்திருந்த மனிஷ் பாண்டேவின் சாதனையை சமன் செய்திருந்தார்.

ஆர்சிபி அணி டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்து விராட் கோலியின் சதத்துடன் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் சதம் அடிக்க, அந்த அணி மிக எளிதாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வென்றது.

- Advertisement -

இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்த பிறகு பேசும்பொழுது ஆடுகளம் வெளியில் இருந்து பார்ப்பது போல பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை என்றும், பந்து பேட்டிங் செய்கையில் நின்று வருவதாகவும், எனவே தாங்கள் எடுத்த ரன்கள் போதுமானதாக இருக்கும் என்றும் பேசி இருந்தார்.

ஆனால் இதற்குப் பிறகு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தது. ஆனாலும் பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் இருவரும் அதிரடியாக விளையாடி 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதன் காரணமாக அவர்களது வெற்றி வெகு எளிதாக மாறிவிட்டது. அவர்கள் விளையாடும் பொழுது ஆடுகளம் பேட்டிங் செய்ய வசதியாக இருப்பது போல் தெரிந்தது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் சிலர் விராட் கோலியின் மெதுவான ஆட்டத்தின் காரணமாகவே ஆர்சிபி அணி தோல்வி அடைந்து விட்டது என்றும், அந்த அணி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும் என்றும் விராட் கோலி குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசியில் கோலி கிரீன் இன்னும் 10-15 ரன்கள் சேர்த்து எடுத்திருக்கலாம்.. நாங்க நினைச்சது மாறிடுச்சு – பாப் டு பிளிசிஸ் பேச்சு

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜூனை கான் இதுகுறித்து செய்திருந்த ட்வீட்டில் “ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவான சதம் அடித்த விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். சஞ்சு சாம்சன் ஸ்ட்ரைக் ரேட் 164, ஜோஸ் பட்லர் ஸ்ட்ரைக் ரேட் 172 மூலம் மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். பட்லரின் புத்திசாலித்தனமான சதத்திற்கு வாழ்த்துக்கள்” என்று விராட் கோலியை கிண்டல் அடித்திருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.