4 போட்டி 1 விக்கெட்.. கடைசி கட்டத்தில் அஸ்வினுக்கு பவுலிங் கொடுத்தது சரியா? – சங்கக்கரா பதில்

0
471
Ashwin

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 17 வது ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொடுத்தார். அதில் 17 ரன்கள் சென்றது. தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு குறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்கக்கரா பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் கொஞ்சம் சுமாரான ரன் பங்களிப்பே கொடுத்தார்கள். இதற்கு அடுத்து சேர்ந்து விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் 78 பந்துகளில் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய குஜராத் அணிக்கு கேப்டன் கில் புத்திசாலித்தனமாக விளையாடி 44 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழுத்துச் சென்றார். கடைசி கட்டத்தில் ரசித் கான் மற்றும் ராகுல் திவாட்டியா சிறப்பான முறையில் ஆட்டத்தை முடித்து வைத்தார்கள். வேகப்பந்துவீச்சாளர் ட்ரண்ட் போல்டுக்கு இரண்டு ஓவர்கள் மீதம் இருந்த நிலையில், ஆட்டத்தின் 17ஆவது ஓவரை அஸ்வினுக்கு சாம்சன் கொடுத்தார். அந்த ஓவரில் ஷாருக் கான் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி எடுத்தார். ராகுல் திவாட்டியா ஒரு பவுண்டரி அடித்தார். மேலும் அந்த ஓவரில் 17 ரன்கள் வந்தது தோல்விக்கு ஒரு சிறிய காரணமாக அமைந்தது. மேலும் அஸ்வின் கடந்த நான்கு போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார்.

நேற்றைய போட்டிக்கு பின் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா “அஸ்வின் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவர். ஒருவருக்கு எல்லா நாட்களுமே கிரிக்கெட்டில் சிறந்த நாட்களாக இருக்காது. நாங்கள் தொடர்ந்து விஷயங்களைக் கற்றுக் கொள்கிறோம் முன்னேறுவோம். அஸ்வின் ஒரு கடுமையான போட்டியாளர். எனவே அவர் அடுத்த போட்டியில் வேகமாக திரும்பி வருவார்.

நாங்கள் நேற்று சிறப்பாக பேட்டிங் செய்தோம். சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் பேட்டிங் செய்த விதம் மிக அருமையாக இருந்தது. ஹெட்மையர் அவருடைய ஜோனில் சிறப்பாக விளையாடினார். ஜெய்ஸ்வால் நல்ல நிலையில் காணப்பட்டார். இதுவெல்லாம் நேற்றைய போட்டியில் எங்களுக்கு கிடைத்த பாசிட்டிவான விஷயங்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் ஷாருக்கான் கிட்ட அந்த விஷயத்தை சொல்லிக்கிட்டே இருந்தேன்.. நினைச்சபடியே நடந்தது – ராகுல் திவாட்டியா பேச்சு

நேற்று குல்தீப் சென் ஆரம்பத்தில் முதல் மூன்று ஓவர்கள் அற்புதமாக வீசினார். ஆனால் நாங்கள் கடைசி கட்டத்தில் அதை இழந்து விட்டோம். மேலும் நாங்கள் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.