நான் பேட்ஸ்மேன்தான்.. ஆனாலும் இதுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்.. இது மாறனும் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
1237
DK

ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகளை தோற்றது. மேலும் வரிசையாக 6 தோல்விகள் அடைந்தது. ஆனாலும் கூட கடைசி நான்கு போட்டிகளை வென்று இன்னும் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணி குறித்து பல விஷயங்களை அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆர்சிபி அணிக்கு சிறந்த முறையில் ஆரம்பிக்கவில்லை. அந்த அணிக்கு முதலில் இருந்து விராட் கோலி மட்டுமே பேட்டிங்கில் ஒரு தூணாக விளையாடி வந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோருமே மிக மோசமான முறையில் செயல்பட்டார்கள். ஆனாலும் கூட தினேஷ் கார்த்திக் பினிஷர் ஆக தன்னால் முடிந்ததை ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்தார்.

- Advertisement -

மேலும் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் பேட்ஸ்மேன்களுக்கு சமமாக மோசமாக இருந்தது. நட்சத்திர பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வரை பார்ம் இல்லாமல் தடுமாறி வந்தார். இது எல்லாம் சேர்த்து ஆர்சிபி அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பகுதியை மிக மோசமாக மாற்றியது. ஆனால் இதற்கு அடுத்து தற்போது தொடர்ந்து நான்கு வெற்றிகளை பெற்று, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்த அணுகுமுறையை அந்த அணி காட்டி வருகிறது.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ஒவ்வொரு போட்டியிலும் இனி நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது, நாங்கள் ஏற்கனவே பழகிவிட்ட ஒரு உணர்வு என்று நினைக்கிறேன். நாங்கள் பின்பகுதியில் நன்றாக செயல்பட்டு இருக்கிறோம் ஆனால் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஆனாலும் நாங்கள் இதைத்தான் பழகிக் கொண்டு இருக்கிறோம். எங்களிடம் இருப்பதைக் கொண்டு நாங்கள் முயற்சி செய்கிறோம். மேலும் நல்ல இடங்களில் பந்து வீசி வருகிறோம். பந்துவீச்சாளர்களை நல்ல அழுத்தத்தில் வைத்திருக்கிறோம். எனவே நாங்கள் எங்களுக்கு நன்றாக வேலை செய்த விஷயங்களில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இப்பொழுது வெளிப்படையாக பேட்டிங்கில் ரிஸ்க் எடுக்கிறோம். முன்பு நாங்கள் கொஞ்சம் மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தோம். இப்போது கடினமான அணுகுமுறைக்கு மாறியிருக்கிறோம். பந்துவீச்சாளர்கள் மேல் ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறோம். மேலும் ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய சாதகமாகவும் மைதானம் சிறியதாகவும் இருக்கின்றன.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி இதுக்காகத்தான் விராட் கோலிய விரும்புது.. இந்திய அணி நலனுக்காக இது நடந்தே ஆகனும் – அனில் கும்ப்ளே பேட்டி

பேட்ஸ்மேன்கள் மிகச் சுலபமாக பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் அமைப்பதற்கு நான் ஆதரவாளன் கிடையாது. பேட்டிங் மற்றும் பவுலிங் என ஆடுகளம் இரண்டுக்கும் சமமாக இருக்க வேண்டும். ரசிகர்கள் 260 ரன்கள் மட்டுமே எதிர்பார்ப்பது கிடையாது. நாள் முடிவில் அவர்கள் எப்படி சிறந்த போட்டியை பார்த்தார்கள் என்பதுதான் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.