அடுத்த பும்ரா ரெடி.. ஆர்சிபி கேம்பில் கலக்கும் மகேஷ் குமார்.. வீடியோவால் ரசிகர்கள் ஆச்சரியம்

0
50

கிரிக்கெட்டை பொருத்தவரை வேகப்பந்து வீச்சுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. என்னதான் பேட்ஸ்மேன்கள் கடவுளாக கொண்டாடப்பட்டாலும், அதற்கு நிகராக வேகப்பந்து வீச்சாளர்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக அந்த காலத்தில் மெக்ராத், கில்லஸ்பி என ஆரம்பித்து தற்போது பும்ரா, ஸ்டார்க், கம்மின்ஸ், போல்ட் என பேட்ஸ்மேன்களுக்கு நிகராக இவர்களுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 11 வருடங்களுக்கு முன்பாக பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களம் இறங்கியபோது தனித்துவமான பந்துவீச்சு ஸ்டைலை கொண்டிருந்தார். இதுவரை எந்த பந்து வீச்சாளரிடமும் அப்படி ஒரு ஸ்டைலைக் கண்டதில்லை.

- Advertisement -

இதனாலேயே கவனம் ஈர்க்கப்பட்ட பும்ரா, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் சிரமப்பட்டாலும், பின்பு படிப்படியாக தனது கடின உழைப்பின் மூலம் யார்க்கர் பந்துகளை திறமையாக வீசுவதிலும், பந்துவீச்சில் வேரியேஷன்கள் காண்பித்தும் தற்போது உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஐபிஎல் வலைப்பயிற்சியில் பும்ராவின் ஸ்டைலை பின்பற்றி மற்றொரு பந்துவீச்சாளர் பந்து வீசும் வீடியோ இணையதளத்தில் வைரலாகியது.

அச்சு அசலாக பும்ரா 14 அடிகள் ஓடிவந்து பந்து வீசுவது போல இவரும் அதே அடிகளை பின்பற்றி பந்து வீசினார். பின்னர் இதனைப் பற்றி விரிவாக ஆராய்ந்த போது அது இரண்டு வருடங்களுக்கு முன்னால் குஜராத் அணியின் வலைப் பயிற்சியில் ஈடுபட்ட கர்நாடகவைச் சேர்ந்த மகேஷ் குமார் என்பது தெரியவந்தது.

27 வயதான பொறியியல் பட்டதாரியான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் முதன்முதலாக 2018 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வலைப்பயிற்சியில் பந்துவீச்சாளராக பணியாற்றினார். பின்னர் அவரது திறமையை பார்த்த நெக்ரா குஜராத் அணிக்கு வலை பயிற்சியில் பந்து வீச அழைத்தார். அவரது திறமையை கண்டு அவருக்கு ஒரு ஜோடி காலனிகளையும் பரிசாக வழங்கியிருக்கிறார்.

- Advertisement -

வலைப்பயிற்ச்சியில் சிறப்பாக பந்துவீசி கொண்டிருக்கும் இவருக்கு விராட் கோலியிடம் பேசும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. பும்ராவின் பந்துவீச்சு ஸ்டைல் குறித்து இவரிடம் கேட்கப்பட்ட போது, இந்த பந்துவீச்சு ஸ்டைல் எனது பலத்துடன் ஒட்டி இருக்கிறது என்றும் தான் யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இம்பேக்ட் பிளேயர் விதியால்.. டி20 உலக கோப்பை வாய்ப்பை இழந்த ரிங்கு சிங்.. வெளியான தகவல்கள்

தற்போது இவரது பந்துவீச்சு வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இவர் தற்போது திரும்பவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வலை பயிற்சியில் பந்து வீச்சாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது திறமையை மேலும் சிறப்பாக நிரூபிக்க, வரும் காலங்களில் இவர் ஐபிஎல்லிலும் விளையாடலாம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.