இம்பேக்ட் பிளேயர் விதியால்.. டி20 உலக கோப்பை வாய்ப்பை இழந்த ரிங்கு சிங்.. வெளியான தகவல்கள்

0
863
Rinku

நேற்று டி20 உலகக்கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பான்மை இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக, பினிஷிங் இடத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு அளிக்கப்படாத விஷயம் அமைந்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் இம்பேக்ட் பிளேயர் விதிதான் அவரது டி20 உலகக் கோப்பை வாய்ப்பை பறித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் இந்த முறை கொல்கத்தா அணியில் கடந்த முறை விளையாடாத இந்திய பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பினார். அதே சமயத்தில் காயம் அடைந்த அனுபவ வீரர் நிதிஷ் ராணாவுக்கு பதில் இளம் வீரர் ரகுவன்சி மூன்றாவது இடத்தில் விளையாடுகிறார்.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு கூடுதல் பேட்மேனாக வெங்கடேஷ் கிடைத்திருக்கிறார். இத்தோடு கம்பீர் கொல்கத்தா அணியின் மென்டராக வந்ததும் சுனில் நரைனை துவக்க வீரராக மேலே உயர்த்தினார். இதன் காரணமாக கீழ் வரிசையில் இருக்கக்கூடிய பேட்ஸ்மேன்களின் இடம் இன்னும் கீழே சென்றது.

இம்பேக்ட் பிளேயர் விதியால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் விளையாடும் வாய்ப்பை பெற்றது, மேலும் சுனில் நரைன் துவக்க ஆட்டக்காரராக மேலே சென்றது இரண்டும் சேர்ந்து, இளம் அதிரடி இந்திய வீரர் ரிங்கு சிங்கை பேட்டிங் வரிசையில் மிகவும் கீழே தள்ளிவிட்டது. இதன் காரணமாக அவருக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பெரிய வாய்ப்புகளே கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடைசி போட்டியில் அவரை மூன்றாவது இடத்தில் அனுப்பினார்கள். மெதுவான ஆடுகளத்தில் 11 பந்தில் அவரால் 11 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த முறையில் விளையாடிய அவர், தற்போது ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதியின் காரணமாக விளையாட வாய்ப்பு கிடைக்காமல், டி20 உலகக் கோப்பை வாய்ப்பையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவங்கள பாத்து கத்துக்கணும்.. அசத்தலான ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பை அணி.. அனுபவ வீரர் அதிரடி நீக்கம்

இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து ஒரு அதிகாரி கூறும் பொழுது “ரிங்கு சிங் இம்பாக்ட் பிளேயர் விதிக்கு விலை கொடுத்தார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அவர் சாதாரணமான ஒரு துரதிர்ஷ்டமான விஷயத்தால் பாதிக்கப்பட்டு விட்டார். ஹர்திக் பாண்டியா தற்பொழுது மோசமான ஃபார்மில் இருக்கலாம். ஆனால் அவர்தான் தற்போது இந்தியாவின் சிறந்த வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர். எனவே அவரை கழட்டி விடுவது பெரிய ஆபத்தாக போய் முடிந்து விடும்” என்று கூறியிருக்கிறார்.