டி20 உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைக்குமா.? – ஆர்சிபி கோச் வித்தியாசமான பதில்

0
2175
Virat

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மெதுவாக விளையாடி விராட் கோலி சதம் விளாசினார். வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு விராட் கோலியின் தேர்வு குறித்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

ராஜஸ்தானில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்து இருந்தது. 67 பந்துகளில் சதம் விளாசிய விராட் கோலி 73 பந்துகளில் 12 பவுண்டரி, நான்கு சிக்ஸர்களுடன் 113 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். விராட் கோலி சிறப்பாக விளையாடிய போதும், அவர் மெதுவாக விளையாடி அணியின் ரன் வேகத்தை குறைத்தார் என்று பலர் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்து மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ்பட்லர் 58 பந்துகளில் சதம் விளாசி தனது இழந்த பார்மை மீட்டெடுத்தார். மற்றும் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சங் அதிரடியாக விளையாடி 69 ரன்கள் எடுத்து அழுத்தத்தை குறைத்தார்.

பெங்களூர் அணி தோல்வி அடைந்தாலும் இக்கட்டான சூழ்நிலையில் விராட் கோலி களமிறங்கி சதம் விளாசியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னர் அஜித் அகர்க்கர் தலைமையில் தேர்வு குழு விராட் கோலியின் ஐபிஎல் செயல்பாட்டை பொறுத்து அவரை டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யலாமா? வேணாமா? என்பதை முடிவு செய்யப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது.

டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைக்குமா?

தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் அவரை எந்த ஒரு சூழ்நிலையிலும் தவிர்க்கவே முடியாத அளவுக்கு தற்போது உச்சத்தில் வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. மேலும் அதிக ரன்கள் அடித்ததற்கான ஆரஞ்சு தொப்பியும் அவர் வசமே இருக்கிறது. எனவே இது குறித்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் விராட் கோலி, உலகக்கோப்பைக்கான தேர்வில் உச்சத்தில் இருப்பதாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் விரிவாக கூறும்பொழுது
“இந்திய தேர்வுக்குழு குறித்து நான் உண்மையில் எதுவும் கருத்து கூற முடியாது. மேலும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியாது. தேர்வுக்குழுவுக்கு தற்போது ஏராளமான திறமைகள் மற்றும் தரமான வீரர்கள் கிடைத்துள்ளனர். ஆனால் அந்தத் தரத்தின் உச்சியில் தற்போது விராட் கோலி இருக்கிறார்.

இதையும் படிங்க : கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 100.. ஹெட்மியர் செய்த உதவி.. ரகசியத்தை வெளியிட்ட ஜோஸ் பட்லர்

மேலும் ஆர்சிபி அணியின் பேட்டிங் குறித்து கூறிய பயிற்சியாளர்
“நேர்மையாக கூற வேண்டும் என்றால் நாங்கள் தொடக்கத்தில் விளையாடிய விதத்திற்கு இறுதியில் குவித்த ரன்கள் குறைவு. பன்னிரண்டாவது ஓவரில் நாங்கள் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் எடுத்திருந்தோம். இதே நிலையில் சென்று இருந்தால் இந்த பேட்டிங் பிட்ச்சில் 200 ரன்களுக்கு மேல் சென்று இருக்க வேண்டும். ஆட்டத்தில் புதிய பந்தில் நன்றாக தொடங்கி இறுதியில் ரன்கள் குவிக்க தவறினோம். மேலும் டாப்லீ மற்றும் யாஷ் சிறப்பாக பந்து வீசினார்கள். சிராஜ் பவர் பிளேயிங் இறுதி ஓவரில் கொஞ்சம் அதிகமாக ரன்களை கொடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.