கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 100.. ஹெட்மியர் செய்த உதவி.. ரகசியத்தை வெளியிட்ட ஜோஸ் பட்லர்

0
1807

ஜெய்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், இறுதியில் ஜோஸ் பட்லர் சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்த போது, ஹெட்மயர் வெளிப்படுத்திய மகிழ்ச்சி குறித்து சுவாரசியமான கருத்துக்களை பட்லர் பகிர்ந்திருக்கிறார்.

இப்போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியமாக பார்க்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெங்களூர் அணியின் விராட் கோலி 67 பந்துகளில் சதம் விளாசியதுடன் 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்ததோடு 12 பவுண்டரிகளையும், நான்கு சிக்ஸர்களையும் விளாசினார். மற்ற பேட்ஸ்மேன்கள் விராட் கோலிக்கு சரியான ஒத்துழைப்பை வழங்காததால் அவரால் இறுதி கட்டத்தில் ரன்களை அதிரடியாக கொண்டு வர முடியவில்லை.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கிக் களம் இறங்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த முறையும் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.

42 பந்துகளை எதிர்கொண்ட அவர் எட்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 69 ரன்கள் குவித்து பட்லர் உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். அவர் வெளியேறினாலும் ஒரு முனையில் அதிரடியான ஆட்டத்தை பட்லர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரியான் பராக் இந்த போட்டியில் நான்கு ரன்களில் வெளியேறினார்.

ஜோஸ் பட்லர் -க்கு ஹெட்மியர் செய்த உதவி

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற ஆறு பந்துகளுக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், ஜோஸ் பட்லர் 94 ரன்கள் உடன் களத்தில் நிற்க இறுதி ஓவரை ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வீசினார். அவர் வீசிய முதல் பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸரை விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவரில் 189 ரன்கள் குவித்து அபார வெற்றியை பதிவு செய்தது. அப்போது ஜோஸ் பட்லர் சிக்சர் அடித்தவுடன் எதிர்முனையில் இருந்த ஹெட்மயர் அவரை விட தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இப்போட்டிக்கு தயாராகுவதற்கு முன்னர் ஜோஸ் பட்லர் நன்றாக உணர்வதாகவும், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அதிக எண்ணங்கள் தலையில் சுற்றிக் கொண்டிருக்கும் எனவே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறினார். கடைசி பந்தில் ஹெட்மியர் செய்த உதவி குறித்தும் பேசியுள்ளார். போட்டிக்குப் பிறகு பட்லர் பேசும் பொழுது “நான் அடித்த சிக்சரை விட ஹெட்மயரின் கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். நான் சிக்ஸரை அடிப்பதற்கு முன்பு ஹெட்மயர் என்னிடம், ஸ்டம்புக்கு குறுக்கே சென்று மிட்விக்கெட் திசையில் விளாசினால் உங்களுக்கு ஒரு சிக்சர் கிடைக்கும் என்று கூறினார். அவர் கூறியதைப் போலவே சிக்ஸர் அடித்தது மகிழ்ச்சி.

இதையும் படிங்க: 67 பந்தில் 100 ரன்.. கோலி மீது தப்பே இல்ல.. ஆர்சிபி தோக்க காரணமே அவங்க தான் – மைக்கேல் கிளார்க் அதிரடி பேட்டி

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியதால் நிறைய ஆதரவு தருகிறார்கள். மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், இந்த சீசனில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.