கடைசியில் கோலி கிரீன் இன்னும் 10-15 ரன்கள் சேர்த்து எடுத்திருக்கலாம்.. நாங்க நினைச்சது மாறிடுச்சு – பாப் டு பிளிசிஸ் பேச்சு

0
129
Faf

இன்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணிக்கு ஆரம்பத்தில் முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் கிடைத்தும், அந்த அணியால் 200 ரன்கள் எடுக்க முடியவில்லை.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி 67 பந்துகளில் சதம் அடித்து, ஆட்டம் இழக்காமல் 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். கேப்டன் பாப் டு பிளிசிஸ் 33 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார். ஆர்சிபி இந்த போட்டியில் 200 ரன்கள் எடுக்கும் என்று இருந்த நிலையில், அந்த அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். கடைசி வரை களத்தில் நின்று விளையாடிய ஜோஸ் பட்லர் சரியாக 100 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளையும் வென்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி ஐந்து போட்டியில் நான்கை தோற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

தோல்விக்கு பின் பேசிய ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளிசிஸ் “நான் விராட் கோலி உடன் விளையாடிய பொழுது இந்த விக்கெட் கொஞ்சம் ட்ரிக்கியாக இருப்பதை உணர்ந்தேன். இங்கு 190 என்பது நல்ல ஸ்கோர் என்று நினைத்தேன். கடைசியில் இன்னும் பத்து முதல் பதினைந்து ரன்கள் சேர்த்து எடுத்திருக்கலாம். அப்போது விளையாடிய கிரீன் மற்றும் விராட் கோலி இதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவது சிரமமாகவும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சுலபமாகவும் இருந்தது.

பந்து வீச்சின் ஆரம்பத்தில் முதல் நான்கு ஓவர்களில் நாங்கள் நன்றாக இருந்தோம். இதற்கு அடுத்து டாகரின் ஐந்தாவது ஓவரில் 20 ரன்கள் சென்றது அழுத்தத்தைஎங்கள் மீது மாற்றியதாக நான் நினைக்கிறேன். ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்த பிறகு அவர்கள் அணியில் எல்லோரும் வலது கை பேட்ஸ்மேன்களாக விளையாடியதால், நான் மேக்ஸ்வெல்லை பந்து வீச வைக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : அஸ்வினுக்கு எதிரா என்னால எதுவும் பண்ண முடியல.. நீங்க நினைக்கிற மாதிரி பிட்ச் இதில்ல – விராட் கோலி பேச்சு

இதன் காரணமாக இடதுகை சுழற் பந்துவீச்சாளர் மற்றும் லெக் ஸ்பின்னர் இருவரையும் பந்து வீச வைத்தோம். ஆனால் அவர்கள் இருவரையும் தாக்கி விளையாட சென்றார்கள். நாங்கள் தற்காப்பாக விளையாடக்கூடிய நிலையில் இல்லை. எனவே நாங்கள் எங்களுடைய ஸ்பின்னர்களை வைத்து ஆட்டத்தை நகர்த்தினோம். நாங்கள் கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டோம். மேலும் இது குறித்து நாங்கள் ஏற்கனவே பேசி இருக்கிறோம். ஆனாலும் இதற்காக கவலைப்பட தேவையில்லை. நாங்கள் பீல்டிங்கில் தீவிரமாக மட்டும் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.