அஸ்வினுக்கு எதிரா என்னால எதுவும் பண்ண முடியல.. நீங்க நினைக்கிற மாதிரி பிட்ச் இதில்ல – விராட் கோலி பேச்சு

0
553
Virat

இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவரில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வென்றிருக்கிறது.

முதலில் டாஸ் வென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அந்த அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 33 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். மற்ற வந்த வீரர்கள் யாரும் அதிரடியாக விளையாட முடியவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலி 67 பந்தில் சதம் அடித்தார். மேலும் கடைசி வரை நின்று 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. சாகல் நான்கு ஓவர்களுக்கு 32 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் ரன் இல்லாமல் வெளியேறினார். ஆனால் அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். பட்லர் உடன் 148 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ந்து விளையாடிய பட்லர் சிக்ஸர் அடித்து 58 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெல்ல வைத்தார்.

விராட் கோலி இந்த போட்டியில் சதம் அடித்து பேட்டிங் முடித்துவிட்டு பேசிய பொழுது ” இந்த விக்கெட்டை வெளியில் இருந்து பார்க்கும் பொழுது பேட்டிங் செய்ய சாதகமான தட்டையான விக்கெட்டாக தெரிகிறது. ஆனால் விளையாடும் பொழுதுதான் பந்து விக்கெட் நின்று வருவதும், பந்தின் வேகத்தில் மாறுபாடு இருப்பதும் உணர முடிகிறது. பாப் மற்றும் நான் எங்கள் இருவரில் ஒருவர் கடைசி வரை நிலைத்து நின்று விளையாட வேண்டி இருந்தது. நாங்கள் அடுத்த இந்த ரன்கள் இந்த ஆடுகளத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 19.1 ஓவர்.. பட்லர் பதிலடி சதம்.. விராட் கோலி ஆட்டம் வீண்.. ஆர்சிபியை வீழ்த்தி ராஜஸ்தான் பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தை பிடித்தது

மேலும் பந்துவீச்சாளர்கள் என் விக்கெட் மீது கடினமாக செல்வார்கள். எனவே நான் அவர்களை யூகத்தில் வைத்திருக்க வேண்டும் என நினைத்தேன். மற்றபடி எந்த முன்முடிவும் செய்து வரவில்லை. இது அனுபவத்தைக் கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடும் முதிர்ச்சி சம்பந்தப்பட்டது. பனி இருந்தபோதிலும் ஆடுகளம் வறட்சியாக கரடு முரடாக காணப்பட்டது. எனக்கு பேட்டிங் செய்வது எளிதாக இருக்காது. அஸ்வினுக்கு எதிராக என்னால் ஆக்ரோஷமாக ஆட முடியவில்லை. சுழற் பந்து வீச்சுக்கு எதிராக ஸ்லாக் செய்ய முடியவில்லை. எனவே நேராக பந்தை தரையில் வைத்து ஆட வேண்டியதாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.