பும்ரா ஆர்சிபி டீமுக்கு வேணும்.. என்னால ரெண்டு விஷயத்தை ஏத்துக்கவே முடியல – பாப் டு பிளேசிஸ் புலம்பல்

0
1194
Faf

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் முதல் அரை சதத்தை இந்த போட்டியில் அடித்து இருந்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. பும்ரா ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இதற்கு அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி மிகச்சுலபமாக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வென்றது. ஆறாவது போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணிக்கு இது ஐந்தாவது தோல்வியாக அமைந்தது.

- Advertisement -

போட்டியில் தோல்விக்கு பிறகு பேசிய ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் “இன்று எங்களுக்கு இரண்டு விஷயங்கள் விழுங்குவதற்கு மிக கடினமான மாத்திரையாக அமைந்தது. இரண்டாவது பந்து வீசும் பொழுது பனிப்பொழிவு இருந்தது, இதற்கு எப்படியாவது நான் டாஸ் வெல்ல வேண்டும். இரண்டாவதாக அவர்கள் மிக நன்றாக விளையாடினார்கள். எங்கள் மீது நாங்களே அழுத்தம் கொடுத்துக் கொண்டோம். குறிப்பாக பவர் பிளேவில்
நாங்கள் நிறைய தவறுகள் செய்தோம்.

பனியின் தாக்கம் இருக்கும் என்று தெரியும். நாங்கள் 250 ரன்கள் சென்றிருந்தால் சரியாக இருக்கும். ஆனால் அவர்கள் நாங்கள் எடுத்த 196 ரன்னை மிகவும் குறைவானதாகக் காட்டி விட்டார்கள். பனிப்பொழிவு இருக்கும் என்றால் நீங்கள் நிறைய ரன்கள் எடுக்க வேண்டும். மேலும் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது, பந்தும் அடிக்கடி மாற்றப்பட்டது. நானும் படிதாரும் பேட்டிங்கில் இருந்த பொழுது நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் அவர்கள் திரும்பி வந்தார்கள்.

பும்ரா கையில் பந்தை எடுக்கும் போதெல்லாம் நீங்கள் அவரை அழுத்தத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அவருக்கு பல திறமைகள் இருக்கின்றன. அவர் அழுத்தத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசுகிறார். லஷீத் மலிங்காவின் வழிகாட்டுதலின் கீழ் அவர் இன்னும் நிறைய சிறப்பாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா என் பேட் இல்ல கால உடைச்சிடுவார்.. அவரை பயிற்சியில விளையாடியே 2-3 வருஷம் ஆச்சு – சூரியகுமார் யாதவ் பேட்டி

பும்ரா எங்கள் அணியில் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். நாங்கள் பேட்டிங் மூலம் பெரிய ஸ்கோரை பெற வேண்டும். எங்கள் பவுலிங் யூனிட் சிறப்பானதாக இல்லை என்பது எங்களுக்கு தெரியும். எனவே அதை மேனேஜ் செய்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் ஆக்கபூர்வமாக இருந்து, வழிகளைக் கண்டுபிடித்து, பவர் பிளவில் கடினமாக பேட்டிங்கில் விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.