நிறுத்துங்க இதெல்லாம் ரொம்ப ஓவர்.. தீபக் சாஹர் மீண்டும் காயம்.. ரசிகர்களுக்கு அவரின் அக்கா பதிலடி

0
425

நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சிஎஸ்கே பந்துவீச்சாளர் தீபக்சகார் ஒரு ஓவரை வீசி முடிப்பதற்கு முன்பாகவே காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

தீபக்சகார் அடிக்கடி காயம் அடைவதால் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வரும் நிலையில், அவரது சகோதரியான மால்தி சகார் ரசிகர்களின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்து தனது சகோதரனுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளார். அவர் இட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் அதிகபட்சமாக 48 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே 200 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 40 முதல் 50 ரன்கள் வரை குறைவாகவே குவித்தது.

இதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி மிகவும் எளிதாக 16 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் பேர்ஸ்டோ 30 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். ரூசோ 23 பந்துகளில் 43 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு இவர்கள் இருவரும் முக்கிய அடித்தளம் இட்டனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 163 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் முதல் ஓவரை தீபக்சகர் வீசினார். இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் கொடுத்த நிலையில், மூன்றாவது பந்து வீச முடியாமல் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். காயம் காரணமாக அவருக்கு அடிக்கடி இது போன்று ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்வதால் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்தனர். இதனால் அவரது சகோதரியும் பிரபல பாலிவுட் நடிகையுமான மால்தி சகார் உணர்வில்லாமல் யாரும் பேசாதீர்கள் அவர் காயத்தில் இருந்து மீண்டு வர ஆதரவு தாருங்கள் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் தனது வலைதளத்தில் பதிவிட்ட போது “மிகவும் உணர்ச்சி அற்றவர்களாக இருப்பதை நிறுத்துங்கள் நண்பர்களே! இந்த காயங்களை யாரும் என்ஜாய் பண்ணி அனுபவிக்கவில்லை. தீபக்சகார் தன்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறார். மேலும் அவர் வலுவாக திரும்புவார். ட்ரோல் செய்வதை நிறுத்திங்க” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க:சிஎஸ்கே 5ல் 5 தோல்வி.. பஞ்சாப் கிங்ஸ் போட்ட பதிவு.. கடுப்பான சென்னை ரசிகர்கள்

அவரது சகோதரி இவ்வாறு பதிவிட்டதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக பல ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.