“கோலி ஓய்வு விஷயத்தில் பொய் சொல்லிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க” – ஏபி டிவிலியர்ஸ் பேச்சு

0
519
Virat

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி முதல் இரண்டு டெஸ்ட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முதலில் இடம் பெற்று இருந்த விராட் கோலி பிறகு குடும்ப காரணங்களுக்காக விலகிக் கொண்டார்.

தற்பொழுது தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிந்தும், விராட் கோலி மீண்டும் வருவாரா? அல்லது இந்த தொடர் முழுக்க வரமாட்டாரா? என்பது குறித்து எதுவும் தெரியாமல் இருந்து வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியத் தேர்வுக்குழு அடுத்து மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவிப்பதில் காலதாமதம் செய்து வருகிறது. மேலும் கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரின் காயமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

இந்த நிலையில் விராட் கோலி ஓய்வு குறித்து ஏபி டிவில்லியர்ஸ் முதன் முதலில் பேசிய பொழுது, விராட் கோலியின் ஓய்வு எடுக்கிறார் என்று தனக்குத் தெரிந்துவிடும் என்றும், ஆனால் அந்தக் காரணத்தை நட்பை கருதி நான் கூற மாட்டேன் என்றும் சொல்லியிருந்தார்.

அதே சமயத்தில் சில நாட்களில் தன்னுடைய யூ டியூப் சேனலில் ரசிகர் ஒருவருடைய விராட் கோலி ஓய்வு குறித்த கேள்விக்கு, விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தங்களின் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள், அதனால் விளையாடவில்லை என்பதாகக் கூறியிருந்தார். விஷயத்தை வெளியில் கூறமாட்டேன் என்றவர் இப்படிப் பேசியது பெரிய சலசலப்பை உருவாக்கியது.

- Advertisement -

இந்த நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது “நான் என் யூட்யூப் சேனலில் கூறியது போல குடும்பம் எப்பொழுதும் முதன்மையானது. அதே நேரத்தில் விராட் கோலி விஷயத்தில் நான் ஒரு பயங்கரமான தவறு செய்து விட்டேன். பொய்யான தகவலை பகிர்ந்து விட்டேன். விராட் கோலிக்கு குடும்பம் மிகவும் முக்கியமானது என்று அர்த்தத்தில் நினைத்து விட்டேன்.

இதையும் படிங்க : “இஷான் கிஷான் போனை எடுங்க தம்பி.. அப்பதான் டீம்ல எடுப்பாங்க.. டிராவிட் சரி” – ஆகாஷ் சோப்ரா பேச்சு

உண்மையில் விராட் கோலி விஷயத்தில் என்ன உண்மை என்பது யாருக்கும் தெரியாது. விராட் கோலியை பின்தொடரக்கூடிய அனைவரும் இந்த நேரத்தில் அவரை வாழ்த்த வேண்டும். இந்த இடைவெளிக்கு என்ன காரணமாக இருந்தாலும் அவர் மீண்டும் வலிமையாக திரும்பி வருவார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.