சிஎஸ்கே வெற்றிக்கு.. கேப்டன் ருதுராஜ் எடுத்த 3 முக்கியமான முடிவுகள்.. கேப்டன்சியில் மாஸ் கம்பேக்

0
2438
Ruturaj

இன்று பிளே ஆப் சுற்றுக்கு முக்கியமான போட்டியில் சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றியில் கேப்டனாக ருதுராஜ் சில சிறப்பான முடிவுகளை எடுத்திருக்கிறார்.

கடைசியாக சேப்பாக்கத்தில் இதே பஞ்சாப் அணிக்கு எதிராக கேப்டனாக ருதுராஜ் சில முக்கிய தவறுகளை செய்தார். இதன் காரணமாக அவர் மீது பெரிய விமர்சனங்கள் இருந்தது. தோல்விக்கு முழு காரணம் அவர்தான் என்பது போல தோற்றம் உருவாக்கப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் தான் பிளே ஆப் சுற்றுக்கு மிக முக்கியமான போட்டியில் தவறுகளை திருத்திக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இன்றைக்கு இம்பேக்ட் பிளேயராக பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வி இடம் கடைசியாக செல்வதற்காக காத்திருந்தார். இறுதியில் பிளேயிங் லெவலில் இருந்த பேட்ஸ்மேன்கள் விளையாடி முடித்த காரணத்தினால், சமீர் ரிஸ்விக்கு பதிலாக சிமர்ஜித் சிங்கை கொண்டு வந்தார். அவர் தன் பங்குக்கு இரண்டு விக்கெட்டை கைப்பற்றி வெற்றிக்கு உதவி செய்தார்.

மேலும் இன்று ரகானே ஆட்டம் இழந்தவுடன் டேரில் மிட்சலை பேட்டிங் வரிசைக்கு கொண்டு வந்தார். அவருடன் சேர்ந்து முக்கியமான 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் பவர் பிளேவில் அமைத்தார். மெதுவான ஆடுகளத்தில் சிஎஸ்கே பவர் பிளேவில் எடுத்த ரன்கள்தான் அவர்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

இந்த முறை சிவம் துபே ஆட்டம் இழந்ததும் ரவீந்திர ஜடேஜாவை கொண்டு வராமல், மொயின் அலியை கொண்டு வந்தார். அதற்குப் பிறகுதான் ரவீந்திர ஜடேஜா விளையாட வந்தார். இதேபோல் தைரியமாக ஜடேஜா இருக்கும் பொழுது அணியில் அவரைப் போலான சான்ட்னரை எடுத்தார். மேலும் அவரை பவர் பிளேவில் மிகச் சரியாகவும் பயன்படுத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி 9வது இடத்தில் வந்தா.. சிஎஸ்கே டீம்க்கு தேவையில்லை.. அவங்களை எடுக்கலாம் – ஹர்பஜன் சிங் விமர்சனம்

இந்த வகையில் கேப்டன்சியில் ருதுராஜ் எடுத்த 4 முடிவுகள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான முடிவுகளாக அமைந்திருக்கின்றன. இம்பேக்ட் பிளேயர், பேட்டிங் ஆர்டரில் இரண்டு மாற்றம், சான்ட்னரை உள்ளே கொண்டு வந்து சரியான இடத்தில் பயன்படுத்தியது என கேப்டன் பொறுப்பில் மாஸ் கம்பேக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.