முஸ்தஃபிசுர் ரஹமான் செய்த காரியம்.. கடுப்பாகி கோபத்தில் திட்டிய ஜடேஜா.. களத்தில் என்ன நடந்தது?

0
7589
Jadeja

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பேட்டிங்கில் ரவீந்திர ஜடேஜா மிகச் சிறப்பாக செயல்பட்டு தனது மூன்றாவது ஐபிஎல் அரை சதத்தை அடித்தார். ஆனால் பந்துவீச்சின் போது அவர் தனது சக அணி வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை கோபத்தால் திட்ட வேண்டியதாக அமைந்தது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு கடந்த போட்டி போல் ரகானே துவக்க வீரராக வந்தார். இதன் காரணமாக விக்கெட்டுகள் வேகமாக பவர் பிளேவில் சரிந்ததால், சிவம் துபேவை அந்த நேரத்தில் கொண்டு வருவதற்கு பதிலாக, இரண்டு விக்கெட் இழப்புக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா களம் இறக்கப்பட்டார்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் முன்கூட்டியே வந்ததோடு சிறப்பாகவும் விளையாடினார். 34 பந்துகளை சந்தித்த அவர் அரைசதத்தை அடித்தார். மேலும் தொடர்ந்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய அவர் 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இன்று முதலில் விளையாடிய பொழுது ஆடுகளம் மெதுவாக இருந்ததற்கு, ஜடேஜாவின் பேட்டிங் சிறப்பானதாகவே அமைந்தது.

இதே போல் அவருக்கு பந்துவீச்சிலும் சிறப்பான நாளாக அமைந்திருக்க வாய்ப்புகள் இருந்தது. ஆனால் குயிண்டன் டி காக் ஆரம்பத்தில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை பதிரனா தவறவிட்டார். இதனால் லக்னோ அணி முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, அங்கேயே சிஎஸ்கே அணியின் வெற்றிக்கனவை அளித்தது.

இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் ஜடேஜா பந்துவீச்சில் இரண்டு கட் ஷாட்டுகள் அடித்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார். அப்போது ஷார்ட் தேர்ட் மேன் பகுதியில் பீல்டிங் நின்ற முஸ்தஃபிசுர் பந்தை மிகவும் மெதுவாக துரத்தி சென்றார். அவர் அதை விழுந்து தடுத்து பிடிக்க முயற்சி செய்யவில்லை. இதனால் எளிதாக பந்து பவுண்டரிக்கு சென்றது. இதன் காரணமாக ஜடேஜா ஏமாற்றம் அடைந்து சில வார்த்தைகளை விட்டு களத்திலேயே திட்டி விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி உள்ள வந்தப்ப சத்தத்தால பவுலர்ஸ் பயந்துட்டாங்க.. அதனால 20 ரன்ஸ் குடுத்துட்டாங்க – கேஎல்.ராகுல் பேட்டி

பந்தை பிடிக்கும் வாய்ப்பில் இருந்தாலும் கூட, பங்களாதேஷ் அணிக்காக நாடு திரும்ப இருக்கும் முஸ்தஃபிசுர் காயம் அடையாமல் இருக்க வேண்டும் என்கின்ற முன்னெச்சரிக்கையோடு, மெதுவாக ஓடிப் பந்தை வேண்டுமென்றே தவறவிட்டது போல் இருந்தது. இதுதான் ஜடேஜா நிதானம் இழந்து களத்திலேயே திட்டும் அளவுக்கு செல்வதற்கு காரணமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்!