தோனி உள்ள வந்தப்ப சத்தத்தால பவுலர்ஸ் பயந்துட்டாங்க.. அதனால 20 ரன்ஸ் குடுத்துட்டாங்க – கேஎல்.ராகுல் பேட்டி

0
10877
IPL2024

நடப்பு ஐபிஎல் 17ஆவது சீசனில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். தோனியின் வருகை தங்கள் பந்துவீச்சாளர்களை பயமுறுத்தி விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்கள், தோனி 8 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்கள். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் அந்த அணிக்கு பவர் பிளேவில் 51 ரன்கள் வந்தபோதிலும், மிடில் ஓவர்களில் பெரிதாக ரன்கள் வரவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய லக்னோ அணி 19 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. குயிண்டன் டி காக் 43 பந்தில் 54 ரன்கள், கேப்டன் கேஎல்.ராகுல் 53 பந்தில் 82 ரன்கள் எடுத்தார்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணிக்கு சிறப்பான வெற்றியாக இந்த வெற்றி பதிவானது.

இந்த போட்டியில் வெற்றிக்குப் பின் பேசிய கேப்டன் கேஎல்.ராகுல் ” இன்று நாள் முடிவில் நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். வெற்றிபெறும் பொழுது உங்களுக்கு எல்லாமே சரியாக இருப்பதாக தோன்றும். நாங்கள் எங்களுடைய திட்டங்களில் சரியாக இருந்தோம். இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆடுகளத்தைப் பொறுத்து நான் என்னுடைய பந்துவீச்சாளர்களை பயன்படுத்துகிறேன்.

நாங்கள் திட்டங்களில் சரியாக இருந்த பொழுதும், 160 ரன்கள் கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆடுகளம் கொஞ்சம் மெதுவாகவும் பந்து கிரிப் ஆகியும் வந்தது. இப்படியான நிலையில் தோனி பேட்டிங் செய்ய வந்த பொழுது, எங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் உண்டானது. அவர் பந்துவீச்சாளர்கள் மேல் அழுத்தத்தை உண்டாக்குகிறார். மேலும் அவர் உள்ளே வந்த பொழுது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தால் எங்கள் பந்துவீச்சாளர்கள் பயந்து விட்டார்கள். இதனால் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சென்று விட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : லக்னோ டீம் சேப்பாக்கத்துக்கு வரட்டும்.. அங்க எங்க ஹோம் ஒர்க் வேற மாதிரி இருக்கும் – ருதுராஜ் பேட்டி

சிஎஸ்கே ஸ்பின்னர்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று எனக்குத் தெரியும். எனவே நான் எந்த பந்துவீச்சாளரை தாக்கி விளையாட வேண்டும் என்று சரியாக தேர்ந்தெடுத்தேன். குயிண்டனும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இன்று லக்னோ மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மினி சென்னை மைதானம் ரசிகர்கள் போல இருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்கு எதிராக எங்களுடைய இளம் அணி விளையாடுவதை விரும்புகிறேன். அடுத்து அவர்களை மீண்டும் சேப்பாக்கத்தில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.