5வதா பேட்டிங்கில ஒரு ஆப் ஸ்பின்னர் வந்தாரு.. பெரிய வேலைய பாத்துட்டாரு – அஸ்வின் பற்றி டெல்லி கோச் பேட்டி

0
441
Ashwin

நேற்று ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே ஆன போட்டியில், மீண்டும் ஒருமுறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புத்திசாலித்தனமான முடிவுகள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. குமார் சங்கக்கரா தலைமை பயிற்சியாளராக வந்ததிலிருந்து, அந்த அணி பல புதுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அவர்களுக்கான இம்பேக்ட் பிளேயரை எடுப்பதில் மிகச் சிறப்பான நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். அஸ்வின் இல்லாமல் ஆறு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஏழாவது பேட்ஸ்மேனை பிளேயிங் லெவனில் வைக்காமல், வெளியில் வைக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் பேட்ஸ்மேன்கள் மட்டுமே பேட்டிங் செய்து முடித்து விட்டால், இம்பேக்ட் பிளேயரை பவுலராக எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் இதன் காரணமாக 20 ஓவரை எடுத்துச் சென்று விளையாடும் எண்ணம் இயல்பாக வந்து விடுகிறது.

- Advertisement -

இதேபோல் நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 36 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த இடத்தில் எல்லாவற்றையும் யோசித்து அதிரடியாக ரவிச்சந்திரன் அஸ்வினை களம் இறக்கி விட்டார்கள். உள்ளே வந்த அவர் தட்டிப் பொறுமையாக விளையாடி ரியான் பராக்குக்கு ஒத்துழைப்பு தருவார் என்று டெல்லி இணைத்த போது, குல்தீப் யாதவ் மற்றும் அன்றிச் நோர்க்கியா பந்துவீச்சில் மூன்று சிக்ஸர்களை அடித்து மிரள விட்டார். அவர் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க, ரியான் பராக் மேல் இருந்த ரன் அழுத்தம் போய்விட்டது. மேலும் அதற்கடுத்து விக்கெட்டுகள் கைவசம் இருக்க அடித்து விளையாடி 185 ரன்கள் குவித்தார்கள்.

மேலும் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இருந்த காரணத்தினால், இம்பேக்ட் பிளேயராக தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் நன்ட்ரே பர்கரை உள்ளே கொண்டு வந்தார்கள். அவர் தன்னுடைய அதிவேகத்தில் மிரட்டி இரண்டு விக்கெட் கைப்பற்றி கொடுத்தார். விக்கெட்டை காப்பாற்றி விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் ரன்கள் எடுத்த காரணத்தினால் உள்ளே வந்த கூடுதல் பந்துவீச்சாளர் இம்பேக்ட்டை கொடுக்க, 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

இதுகுறித்து டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் கூறும் பொழுது “நாங்கள் பந்துவீச்சில் முதல் பாதையில் மிகவும் நன்றாக இருந்தோம். ஒன்பதாவது ஓவரில் டைம் அவுட் வந்த பொழுது, ஆடுகளம் நன்றாக மாறி வருகிறது என்பதாக எங்களுடைய வீரர்கள் சொன்னார்கள். நாங்கள் அவர்களை 150 முதல் 160 ரன்களில் கட்டுப்படுத்த நினைத்தோம். ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் அதிகமாக ரன்கள் கொடுத்து விட்டோம். நான் எங்களுடைய பந்துவீச்சாளர்களை அதிகம் விமர்சிக்க மாட்டேன். நோர்க்கியா பந்துவீச்சில் ரன்கள் போவது அரிதானது. அவர் உலகின் சிறந்த டெத் பவுலர்களில் ஒருவர். அவர் தொடர் செல்ல செல்ல சிறப்பான நிலைமைக்கு வருவார் என்று நினைக்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னைக்கு கேகேஆர் டக்அவுட்ல கம்பீர கோலி பார்த்தா.. கண்டிப்பா இது நடக்க போகுது – வருண் ஆரோன் பேச்சு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் வந்த ஒரு ஆப் ஸ்பின்னர் (அஸ்வின்) தன்னுடைய தைரியமான பேட்டிங்கால் எங்களிடமிருந்து ஆட்டத்தை பறித்துக் கொண்டு போய்விட்டார் என்று நினைக்கிறேன். இதற்குப் பிறகு ரியான் பராக் ஆட்டத்தை அழகாக இறுதியில் முடித்துக் கொடுத்தார். மேலும் நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது 8, 9 ஓவர்களின் போது அவர்களை விட முன்னணியில் இருந்தோம். ஆனால் அவர்கள் இரண்டாவது பகுதியில் பத்து ஓவர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களை வீழ்த்தி விட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்.