ஆர்சிபிக்கு இந்த பையன் நெருப்பு மாதிரி இருப்பான்.. நேர்ல பார்த்தேன் செம ஆட்டிட்யூட் – அஸ்வின் பேட்டி

0
213
Ashwin

நடந்து முடிந்த பெண்கள் டி20 கிரிக்கெட் லீக்கில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிகழ்வு பதினாறு ஆண்டுகளாக ஆண்கள் ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரில் வெற்றி பெறாமல் இருந்து வந்த நிலையில் ஊக்கத்தை கொடுத்திருக்கிறது.

மேலும் ஆர்சிபி அணியில் ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் இணைந்திருக்க, ரஜத் பட்டிதார் காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்க, அவர்களது பேட்டிங் யூனிட் மிக பலமாக காணப்படுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் அல்ஜாரி ஜோசப் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோரைக் கொண்டு பாஸ்ட் பவுலிங் யூனிட்டும் வலிமையாக இருக்கிறது.

தற்பொழுது ஆர்சிபி அணியின் பிரச்சனையாக சுழல் பந்துவீச்சு துறைதான் இருக்கிறது. லெக் ஸ்பின்னராக கரன் சர்மா, மேலும் லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னராக மயங்க் டாகர் ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் விக்கெட்டை கைப்பற்றக்கூடிய சாகல் போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாதது பின்னடைவு.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 17 ஆவது ஐபிஎல் சீசனில் முதல் போட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் அந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர்களுடைய சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்று விளையாடுகிறது.

- Advertisement -

பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலிக்கு நல்ல புள்ளி விபரங்கள் இருக்கிறது. ஆனால் அவரையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஆர் சி பி அணியை எடுத்துக் கொண்டால், அவர்களது மொத்த அணியின் செயல்பாடும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மிகவும் சுமாராக இருக்கிறது. இது அந்த அணிக்கு கவலை அளிக்கும் ஒரு புள்ளிவிபரம் ஆகும்.

நேரில் பார்த்தேன் பையன் கில்லி மாதிரி

இந்த நிலையில் அந்த அணியின் 27 வயதான வேகபந்துவீச்சாளர் வைசாக் விஜயகுமார் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “நான் வைசாக் விஜயகுமாரை ஆர்வமாகப் பார்க்கிறேன். சமீபத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி டிராபியை பார்க்க நேரில் சென்று இருந்தேன். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக பிளாட்டாக இருந்தது. ஆனாலும் வழக்கமாக சென்னை செம்மண் ஆடுகளத்தின் பவுன்ஸ் கிடைத்தது. இந்த போட்டியில் நான்கு நாட்களிலும் வைசாக் விஜயகுமார் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : டி20 WC இந்திய அணியுடன் மோதல்.. ரிட்டையர்டை கேன்சல் செய்ய பாகிஸ்தான் வீரர் திட்டம்

அவரது அணுகுமுறை தீ மாதிரி இருந்தது. இதேபோல் டி20 கர்நாடக பிரிமியர் லீக்கையும் பார்த்தேன். அதிலும் குல்பர்கா அணிக்காக அவரது ஆட்டம் அசாதாரணமானது. மேலும் அணியை முன்னால் இருந்து வழி நடத்தினார். அனுபவமின்மை இருந்தாலும் கூட வைசாக் விஜயகுமார் போன்ற ஒருவர் ஆர்சிபி அணிக்கு முக்கியமானவராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.