நான் ஆரம்பத்தில இந்த விஷயத்துக்கு வெயிட் பண்ணேன்.. அப்புறம் முடிச்சு விட்டுட்டேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
96
Surya

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில், ஒரு வழியாக ஹைதராபாத் அணியை வென்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்று போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸ் தோற்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஜோடியில் இந்த முறை அபிஷேக் ஷர்மா 16 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஹெட் 30 பந்தில் 48 ரன்கள், கேப்டன் கம்மின்ஸ் 17 பந்தில் ஆட்டம் இழக்காமல் 35 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் பியூஸ் சாவ்லா மற்றும் ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமாக தெரிந்த ஆடுகளத்தில் இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மும்பை துவக்க ஜோடி மற்றும் நமன் திர் என முதல் மூன்று விக்கெட்டுகள் பவர் பிளேவில் ஆட்டமிழந்து வெளியேறின. இதற்குப் பிறகு நான்காவது இடத்தில் வந்த சூரியகுமார் மற்றும் திலக் வர்மா இருவரும் பொறுப்பு எடுத்து விளையாடினார்கள்.

இந்த ஜோடி இறுதிவரை களத்தில் நின்று, 79 பந்தில் 143 ரன்கள் குவித்தது. சூரியகுமார் 51 பந்தில் அதிரடியாக 102 ரன்கள் குவித்தார். உடன் விளையாடிய திலக் வர்மா பொறுமையாக 32 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். 17.2 ஓவரில் மும்பை அணி வெற்றி பெற்றது. இறுதியாக அந்த அணிக்கு வெற்றி வந்தது.

இன்று ஆட்டநாயகன் விருது பெற்ற சூரிய குமார் யாதவ் பேசும் பொழுது “கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு நான் 20 ஓவர்கள் பீல்டிங் செய்து 18 ஓவர் விளையாடுகிறேன். என்னுடைய களைப்பிற்கு காரணம் அதுதான். மற்றபடி நன்றாக இருக்கிறேன். வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயமாக இருந்தது. நான் பேட்டிங் செய்ய சென்றபோது கடைசி வரை ஒருவர் விளையாட வேண்டி இருந்தது. நான் விளையாடும் என் நேரத்தை ரசிப்பேன்.

- Advertisement -

இதையும் படிங்க : சூரியகுமார் என் பக்கத்துல இருக்கிறது அதிர்ஷ்டம்.. இன்னைக்கும் நாங்க கொஞ்சம் தப்பு பண்ணிட்டோம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

இந்த பாரம்பரியம் மும்பை கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. நான் வான்கடேவில் நிறைய விளையாடியிருக்கிறேன். பந்து சீம் ஆகும் பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். பந்து சீம் நின்றதும், வலையில் நான் பயிற்சி செய்த எல்லா ஷாட்களையும் விளையாடினேன். எப்படியும் என்னுடைய இன்டெண்ட் இப்படித்தான் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்