சூரியகுமார் என் பக்கத்துல இருக்கிறது அதிர்ஷ்டம்.. இன்னைக்கும் நாங்க கொஞ்சம் தப்பு பண்ணிட்டோம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
445
Hardik

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சூரிய குமாரின் அதிரடி ஆட்ட சதத்தால் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. வெற்றிக்குப் பிறகு அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் வந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் 17 பந்துகளில் அதிரடியாக ஆட்டம் இழக்காமல் 35 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா மற்றும் பியூஸ் சாவ்லா தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழக்கம் போல் ரோகித் சர்மா, இஷான் கிஷான், நமன் திர் மூவரும் ஏமாற்றம் அளித்து வெளியேறினார்கள். இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த சூரியகுமார் மற்றும் திலக் வர்மா இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியை மீட்டெடுத்தார்கள்.

இந்த ஜோடி இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார்கள். 17.2 ஓவரில் மும்பை வெற்றி பெற்றது. சூரியகுமார் யாதவ் 51 பந்தில் 102 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 32 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். மும்பை அணிக்கு நான்காவது வெற்றியாக அமைந்தது.

- Advertisement -

இன்றைய போட்டியில் வெற்றி குறித்து ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது “நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதில் கவனம் செலுத்த விழும் விரும்புகிறோம். இன்று நாங்கள் 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக கொடுத்தோம் என்று நினைக்கிறேன். நான் சரியான பகுதிகளில் பந்து வீச விரும்புகிறேன். இன்று அதை செய்யவும் செய்தேன் அது நன்றாக வேலையும் செய்தது.

இதையும் படிங்க: 17.2 ஓவர்.. சூர்யகுமார் அதிரடி சதம்.. சிஎஸ்கேவுக்கு உதவிய மும்பை.. ஹைதராபாத் தோல்வி

நீங்கள் எப்பொழுதும் பந்துவீச்சாளராக துல்லியமாக இருக்க வேண்டும். தற்பொழுது பந்துவீச்சாளர்கள் தவறு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். சூரியகுமார் எப்பொழுதும் பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார். சிறந்த பேட்ஸ்மேன்களில் அவர் ஒருவர். அவரால் வித்தியாசமான முறையில் ஆட்டத்தை மாற்ற முடியும். அவர் நம்முடைய பக்கத்தில் இருப்பது நம் அதிர்ஷ்டம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -