ஒரே ஒரு ஆசைதான்.. சிஎஸ்கேவை விட்டுக் கிளம்பிய பின் பதிரனா பதிவு.. கலங்கும் ரசிகர்கள்

0
8114
Pathirana

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மதிஷா பதிரனா தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சில நாட்களுக்கு முன்பு இலங்கை திரும்பி விட்டதாக செய்திகள் வந்தது. இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக இலங்கை அணி பங்களாதேஷ் நாட்டிற்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அதில் வெள்ளைப்பந்து தொடரில் இதே போல் தொடைப்பகுதியில் காயம் அடைந்து விளையாடாமல் ஓய்வில் இருந்தார்.

- Advertisement -

பிறகு ஐபிஎல் தொடருக்கு தயாராகி உடனடியாக வந்து சென்னை அணியில் இணைந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணியின் வெற்றியில் மிகப்பெரிய பங்கை கொண்டிருந்தார். எனவே பிளே ஆப் சுற்றின் போது இவரது தேவை சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரியதாக இருந்தது.

இப்படியான நிலையில் தான் டி20 உலகக் கோப்பைக்கு விசா குறித்து சொந்த நாட்டுக்கு திரும்பி இருந்தார். ஆனால் ஒரு போட்டியையும் தவறவிடாமல் உடனடியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட தரம்சாலா மைதானம் வந்தார். ஆனால் அங்கு அவருக்கு தொடைப்பகுதியில் இருந்த காயம் விளையாட முடியாத அளவுக்கு செய்ய நாடு திரும்பிவிட்டார் என்று செய்திகள் வந்தது.

இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “2024 ஐபிஎல் சாம்பியன் கோப்பையை, விரைவில் சிஎஸ்கே அணியின் அறையில் பார்க்க வேண்டும் என்கின்ற என்னுடைய ஒரே விருப்பத்துடன் விடைபெறுகிறேன். சென்னையின் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும், அன்புக்கும் சிஎஸ்கே அணிக்கு நன்றி!” என உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் ஆரம்பத்தில இந்த விஷயத்துக்கு வெயிட் பண்ணேன்.. அப்புறம் முடிச்சு விட்டுட்டேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இதன் மூலம் அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ரூல்ட் அவுட் ஆகிவிட்டார் என்று தெளிவாக தெரிகிறது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காமல் இருந்து வருகிறது. நிச்சயமாக இவர் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பின்னடைவை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!