டி20 WC இந்திய அணியுடன் மோதல்.. ரிட்டையர்டை கேன்சல் செய்ய பாகிஸ்தான் வீரர் திட்டம்

0
421
Pakistan

இந்த வருடம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்கி நடைபெற இருக்கிறது. பங்குபெறும் 20 அணிகளும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டன. இந்த முறை மொத்தம் மூன்று சுற்றுகளாக நடைபெற்று இறுதிப் போட்டிக்கு அணிகள் செல்கின்றன.

முதல் சுற்றில் இந்தியா இடம்பெற்று இருக்கும் குழுவில் பாகிஸ்தான் அணி இடம் பெற்று இருக்கிறது. எனவே இரு அணிகளும் தங்களுடைய இரண்டாவது போட்டியில் மோத இருக்கின்றன. நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையிலும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கக்கூடிய போட்டியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியே இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணிக்கு மீண்டும் கேப்டனாக ரோகித் சர்மா வந்திருக்க, பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் ஷாகின் அப்ரிடி பொறுப்பேற்கிறார். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக செயல்பட்டதால், பாபர் அசாம் எல்லாவிதமான கிரிக்கெட் வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொண்டார்.

ஓய்வு முடிவை கைவிடும் பாகிஸ்தான் வீரர்

மேலும் தற்பொழுது பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்திருக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான் அணியை வென்று சதாப் கான் கேப்டனாக இருக்கும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல, இடது கை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இமாத் வாசிம் மிக முக்கியமான காரணமாக இருந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். பழைய கேப்டன் பாபர் அசாமுக்கும் இவருக்கும் இடையில் உரசல்கள் சென்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிஎஸ்எல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் டி20 உலகக்கோப்பை பாகிஸ்தான் அணிக்கு திரும்புவது குறித்து பேசிய அவர் “பாகிஸ்தான் அணிக்காக நான் விளையாடும் பொழுது எனக்காக நான் ஒரு பெயரை உருவாக்கினேன். எனது நாட்டுக்காக நான் தேவைப்பட்டால் அணியில் இருப்பேன். அப்படி இல்லை என்றால் எந்த பிரச்சனையும் கிடையாது. நான் ஓய்வு பெற்ற பிறகு ஷாகின் அப்ரிடி என்னை அழைத்தார். நான் பிஎஸ்எல் தொடர் முடிந்த பிறகு பேசலாம் என்று கூறியிருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து இஸ்லாமாபாத் யுனைடெட் கேப்டன் சதாப் கான் கூறும் பொழுது “அவர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இமாத் ஓய்வு முடிவை வெளியிட்டதை நான் விரும்பவில்லை. நானும் இந்த ஓய்வு முடிவை திரும்ப பெறுவது குறித்து அவரிடம் பேசினேன்.

இதையும் படிங்க : இந்திய வீரர்கள் இல்லை.. நான் பார்த்து சுயநலமற்ற கிரிக்கெட் வீரர் இவர்தான் – கம்பீர் மிக உருக்கமான பேச்சு

ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு அவரைப் போன்ற வீரர்கள் தேவை. கடவுள் விரும்பினால், அவருடன் அணி நிர்வாகம் பேசினால், அவர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்பி வருவார் என்று நான் நம்புகிறேன்.ஏனென்றால் பிஎஸ்எல் தொடரில் அவர் செயல்பட்ட விதம், மேலும் வெஸ்ட் இண்டிஸ் மண்ணில் கரிபியன் லீக்கில் அவர் விளையாடி இருக்கும் அனுபவம் பாகிஸ்தான் அணிக்கு தேவை” என்று கூறி இருக்கிறார்.