“ரோகித் டிராவிட் எல்லார்கிட்டயும் கேட்டாங்க.. நான் கைய தூக்கினேன்.. நான் பண்ண சேஞ்ச் இது” – அஸ்வின் பேட்டி

0
6999
Ashwin

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இங்கிலாந்து அணி 145 ரன்கள் சுருளுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இது 35 வது ஐந்தாவது விக்கெட் ஆகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட் எடுத்துள்ள அனில் கும்ப்ளே சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் சமன் செய்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில்தான் அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினால் ஐந்து விக்கெட் கைப்பற்ற முடிந்திருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரில் அவரிடம் எதிர்பார்த்த அளவிற்கு விக்கெட்டுகள் வரவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் மிகவும் முக்கியமான தருணத்தில் நான்காவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் அவரது சிறப்பான பந்துவீச்சு வெளிப்பட்டு இருக்கிறது.

இது குறித்து இன்றைய நாள் முடிவுக்கு பின்னால் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் ” இன்று பந்துவீச்சை முதலில் யார் தொடங்கப் போகிறார்கள் என்று கேட்கப்பட்டது, அப்பொழுது நான் தொடங்குகிறேன் என்று கையைத் தூக்கினேன்.புதிய பந்தில் பந்து வீசுவதை நான் ரசிக்கிறேன்.

- Advertisement -

இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு பெரிதான உதவிகள் இல்லை என்று நினைத்தேன். இதனால் நான் திரும்பி சென்று சிந்திக்க வேண்டி இருந்தது. இதற்காக நான் மனரீதியாக என்னை சீரமைத்துக் கொள்ள வேண்டி இருந்தது.

மேலும் என் முழங்கால் சரியாக இல்லை. அதே சமயத்தில் பந்துவீச்சில் நான் ரன்கள் கொடுக்கவும் விரும்பவில்லை. பந்தை ஆடுகளத்தில் அடித்து வீச வேண்டி இருந்தது. எனவே இந்த மாற்றங்களை எல்லாம் செய்து நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன்.

இன்று குல்தீப் யாதவ் மிகவும் புத்திசாலித்தனமாக பந்து வீசினார். அவர் பந்துவீச்சு வேகத்தில் செய்த மாற்றம் மற்றும் அவர் பந்தில் செய்த டிரிப்ட் மிகவும் சிறப்பாக இருந்தது. அவருக்கு கடந்த இன்னிங்ஸ் பந்துவீச்சில் சரியாக அமையவில்லை. நாங்கள் அவரை பேட்டிங்கில் கொஞ்சம் முன்கூட்டி அனுப்பினோம். அவர் அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டு நிறைய நுட்பங்களை வெளிப்படுத்தி நன்றாக விளையாடினார்.

இதையும் படிங்க : ராஞ்சியில் இங்கிலாந்துக்கு சம்பவம்.. 53 ஓவரில் போட்டியை மாற்றிய இந்தியா.. 3ம் நாள் கலக்கலாக முடிவு

நாங்கள் ஹோட்டலுக்கு திரும்பும் பொழுது 70, 80 ரன்கள் குறைவாக எடுத்திருப்போம் என்று நேற்று நினைப்போம். இன்று ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் மிகச் சிறப்பாக துவங்கி இருக்கிறார்கள். இந்த இலக்கைத் துரத்தி ஆட்டத்தை வெல்ல முடியும் என நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.